நீட் பெயரில் கட்டுக்கதை: தி.மு.க., மீது பா.ஜ., பாய்ச்சல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' பெயரில் கட்டுக்கதை: தி.மு.க., மீது பா.ஜ., பாய்ச்சல்

Added : செப் 16, 2021
Share
கோவை : 'நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கட்டுக்கதைகளை கூறி மாணவர்கள் மத்தியில் பொய்யான ஒரு மாயையை தி.மு.க., ஏற்படுத்தியுள்ளது' என, பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறினார்.கோவையில் சேகர் அளித்த பேட்டி:நீட் தேர்வால் பட்டியல் மற்றும் பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பாதிக்கப்படவில்லை. பிளஸ் 2ல் மதிப்பெண்

கோவை : 'நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கட்டுக்கதைகளை கூறி மாணவர்கள் மத்தியில் பொய்யான ஒரு மாயையை தி.மு.க., ஏற்படுத்தியுள்ளது' என, பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறினார்.

கோவையில் சேகர் அளித்த பேட்டி:நீட் தேர்வால் பட்டியல் மற்றும் பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பாதிக்கப்படவில்லை. பிளஸ் 2ல் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்தபோது என்ன நடைமுறை இருந்ததோ, அதே முறை பின்பற்றப்படுகிறது.எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்ததோ, அதே இட ஒதுக்கீட்டு முறை தான் நீட் தேர்வு வந்த பிறகும் பின்பற்றப்படுகிறது. நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது என்ற குற்றச்சாட்டு, கேலிக்கும் நகைப்புக்கும் உரியது.மற்ற போட்டித்தேர்வுகளுக்கு எப்படி தயார் செய்கிறீர்களோ, அதே நடைமுறையில் உங்களை நீங்களே தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அரசு அறிவுரை வழங்கியிருக்க வேண்டும். அதை தவிர்த்து, நீட் தேர்வை ரத்து செய்வோம்; சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவோம் என்று கட்டுக்கதைகளை கூறி, மாணவர்கள் மத்தியில் பொய்யான ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளனர். இதை நம்பி ஏமாற்றமடைந்த மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X