அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: 'போர்' அடிக்கிறதா உதயநிதி?

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (94)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்: ரவி சர்வோத்தமன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சேப்பாக்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதியால், சட்டசபையில் ரொம்ப நேரம் உட்கார முடியவில்லையாம். எதிர்க்கட்சியினர் யாரும், ஆளும் அரசினை எந்த கேள்வியும் கேட்பதில்லை; மாறாக, பாராட்டு தெரிவிக்கின்றனர்... அதனால், 'போர்'
Udhayanidhi Stalin, DMK, Udhayanidhi, உதயநிதி


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


ரவி சர்வோத்தமன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சேப்பாக்கம் தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதியால், சட்டசபையில் ரொம்ப நேரம் உட்கார முடியவில்லையாம். எதிர்க்கட்சியினர் யாரும், ஆளும் அரசினை எந்த கேள்வியும் கேட்பதில்லை; மாறாக, பாராட்டு தெரிவிக்கின்றனர்... அதனால், 'போர்' அடிக்கிறதாம் உதயநிதிக்கு!


latest tamil news


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன், இந்நாள் முதல்வர் ஸ்டாலினின் மகன் என்ற தகுதியை தவிர, வேறொன்றும் இல்லாமல், சட்டசபைக்குள் எளிதாக நுழைந்திருக்கும் உதயநிதிக்கு, போர் அடிக்கத் தான் செய்யும். வாரிசு அடிப்படையில், எந்தவித உழைப்பும், கஷ்டமும் இல்லாமல், கட்சி மற்றும் ஆட்சி பொறுப்புகள் தேடி வருவதால், மக்கள் பிரதிநிதி என்ற அங்கீகாரம் பயனற்ற ஒன்றாகத் தான் தெரியும்.


latest tamil news


சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினுக்கு நேர் பின்புறம் இருக்கை வழங்கி, எப்போதும் கேமராவில் படும்படி அமர வைக்கப்பட்டுள்ளதால், உதயநிதி நொந்து கொள்வதில் ஆச்சரியமில்லை.ஒரு காலத்தில் கண்ணியமிக்கதாக சட்டசபை இருந்தது; அதை நாகரிகமற்ற பேச்சால், செயலால் மாற்றியது யார் என்பது உதயநிதிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


latest tamil news


சட்டசபை உறுப்பினர் பணியை பயனுள்ள வகையில் எவ்வாறு செய்வது என யோசித்து, தேவையற்ற பேச்சுகளை தவிர்த்து, உருப்படியான விஷயங்களில் கவனம் செலுத்தி செயல்பட்டால், உதயநிதிக்கு, போர் அடிக்காது. முயற்சி செய்யுங்களேன் முதல்வர் ஸ்டாலினின் செல்லப் பிள்ளையான உதயநிதி அவர்களே!

Advertisement




வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
21-செப்-202122:09:41 IST Report Abuse
DARMHAR அப்பன் முதலமைச்சர் என்பதால் போர் அடிக்காமல் இருக்க தனிப்பட்ட சலுகைகளை எதிர் பார்க்கிறாரா உதயநிதி ?
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
20-செப்-202112:31:39 IST Report Abuse
jayvee நெற்றியில் குங்குமம் வைத்தால் பெண்களை போல் என்று கூறும் அரேபியா அடிமைக்கு.. மீசை இல்லாமல் ஆடு போல தாடிவைத்தவர்களை பலி ஆடு என்று சொன்னால் சரியாகஇருக்குமா ?
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
20-செப்-202104:50:25 IST Report Abuse
meenakshisundaram சட்ட சபையில் கிரிக்கெட் போல 'சீர் கேர்ள்ஸ் அனுமதிக்கலாம் முன்னணி அல்லது முதன்மை மானிலம் ஆயிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X