தசரா, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு,18 சிறப்பு ரயில்கள் போக்குவரத்து நீட்டிப்பு| Dinamalar

தசரா, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு,18 சிறப்பு ரயில்கள் போக்குவரத்து நீட்டிப்பு

Added : செப் 16, 2021
பெங்களூரு-தசரா, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, பயணியரின் வசதிக்காக, 18 சிறப்பு ரயில்களின் போக்குவரத்தை தென்மேற்கு ரயில்வே துறை நீட்டித்து உள்ளது.பயணியரின் வசதிக்காக, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி பண்டிகைகளை முன்னிட்டு, பெங்களூரிலிருந்து, பல்வேறு இடங்களுக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. எதிர்வரும் நாட்களில் தசரா,

பெங்களூரு-தசரா, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, பயணியரின் வசதிக்காக, 18 சிறப்பு ரயில்களின் போக்குவரத்தை தென்மேற்கு ரயில்வே துறை நீட்டித்து உள்ளது.பயணியரின் வசதிக்காக, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி பண்டிகைகளை முன்னிட்டு, பெங்களூரிலிருந்து, பல்வேறு இடங்களுக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. எதிர்வரும் நாட்களில் தசரா, தீபாவளி பண்டிகைகள் வருகின்றன. பயணியரின் நெருக்கடி அதிகமாக இருக்கும். எனவே பயணியரின் வசதிக்காக, சிறப்பு ரயில்களின் போக்குவரத்தை, டிசம்பர் இறுதி வரை தென் மேற்கு ரயில்வே நீட்டித்உள்ளது.பெரும்பாலான ரயில்கள், செப்டம்பர் 28ல் துவங்கி, நடப்பாண்டு இறுதி வரை நீடிக்கும். அனைத்து ரயில்களும், டிக்கெட் முன் பதிவு செய்யும் ரயில்களாகும்.யஷ்வந்த்பூர் -- ஹடியா, ஹடியா -- யஷ்வந்த்பூர், ஹவுரா -- மைசூரு, மைசூரு -- ஹவுரா, ஹவுரா - - யஷ்வந்த்பூர், யஷ்வந்த்பூர் -- ஹவுரா, ஹடியா -- பெங்களூரு கன்டோன்மென்ட், பெங்களூரு கன்டோன்மென்ட் -- ஹடியா உட்பட, பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X