ஊட்டி : ''நீட் தேர்வை தி.மு.க., எக்காலத்திலும் ரத்து செய்ய முடியாது,'' என, பா.ஜ., தேசிய சிறுபான்மைஅணி செயலாளர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்தார்.மத்திய அரசு கொண்டு வந்த சி.ஏ.ஏ., மற்றும் 'நீட்' தேர்வை எதிர்த்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய, மாநில அரசை கண்டித்து, ஊட்டியில் பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலுார் இப்ராஹிம் பேசியதாவது:மத்திய அரசை குறை கூறுவதை, தி.மு.க., வழக்கமாக கொண்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் 'நீட்' தேர்வு ரத்து செய்வதுதான் என் முதல் கையெழுத்து என்று ஸ்டாலின் கூறினார். எக்காலத்திலும் 'நீட்' தேர்வை ரத்து செய்ய முடியாது. சி.ஏ.ஏ., மற்றும்'நீட்' தேர்வு குறித்து மக்களிடம் தவறான தகவலை பரப்பி பொய், புரட்டு சொல்லும் தி.மு.க.,வுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.மாநிலத்தில், கடந்தாண்டில், 1.16 லட்சம் மாணவ, மாணவிகள் 'நீட்' தேர்வு எழுதியுள்ளனர். அரசு பள்ளியில் படித்த பல மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது.இவ்வாறு, இப்ராஹிம் பேசினார்.மாநில செயற்குழு உறுப்பினர் போஜராஜன், மாநில மகளிர் அணி துணைத்தலைவர் சபிதா போஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE