நிலவையில் உள்ள, 15 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, போராட்டம்| Dinamalar

நிலவையில் உள்ள, 15 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, போராட்டம்

Added : செப் 16, 2021
Share
பெங்களூரு-நிலவையில் உள்ள, 15 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் பெங்களூரில் நேற்று பிரமாண்ட ஊர்வலம், போராட்டம் நடத்தினர்.கிராம பஞ்சாயத்து ஊழியர்களுக்கு கடந்த, 15 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த கிராம பஞ்., ஊழியர்கள் பெங்களூரு சங்கொள்ளி ராயண்ணா சிட்டி ரயில் நிலையத்தில் நேற்று கூடினர்.பேரணியில்

பெங்களூரு-நிலவையில் உள்ள, 15 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் பெங்களூரில் நேற்று பிரமாண்ட ஊர்வலம், போராட்டம் நடத்தினர்.கிராம பஞ்சாயத்து ஊழியர்களுக்கு கடந்த, 15 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த கிராம பஞ்., ஊழியர்கள் பெங்களூரு சங்கொள்ளி ராயண்ணா சிட்டி ரயில் நிலையத்தில் நேற்று கூடினர்.பேரணியில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து ஊர்வலமாக விதான் சவுதாவை முற்றுகையிட புறப்ட்டனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் சுதந்திர பூங்கா அருகில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.இதையடுத்து, சாலையிலே அமர்ந்து அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். நிலுவையில் உள்ள, 700 கோடி ரூபாய் ஊதியத்தை உடனடியாக வழங்கும்படியும், உறுதி அளித்தது போல் வருங்கால வைப்பு நிதி தொகை செலுத்தும்படியும் வலியுறுத்தினர்.'ஊதியம் வழங்காததால் வாழ்க்கை நடத்துவதே சிரமமாக உள்ளது. மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும்' என்று பல மகளிர் ஊழியர்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.போராட்டத்தால் விதான் சவுதா சுற்று வட்டார சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X