அயோத்தி ராமர் கோயில் உற்ஸவ மூர்த்தி விக்ரகங்களுக்கு சிறப்பு பூஜைகள்

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை : அயோத்தியில் கட்டப்பட்டு வரும், ராமர் கோயிலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள, பஞ்சலோகத்தால் ஆன, உற்ஸவ மூர்த்தி விக்ரகங்களுக்கு, முதன் முதலாக சென்னை தி.நகரில் உள்ள, திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியாவில், ராம ஜென்ம பூமி அமைந்துள்ள இடத்தில், பல கோடி ரூபாய் செலவில், பிரமாண்ட ராமர் கோயில் கட்டும்
Ram Mandir, Ayodhya, Shri Ram Temple

சென்னை : அயோத்தியில் கட்டப்பட்டு வரும், ராமர் கோயிலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள, பஞ்சலோகத்தால் ஆன, உற்ஸவ மூர்த்தி விக்ரகங்களுக்கு, முதன் முதலாக சென்னை தி.நகரில் உள்ள, திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோயிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.



உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியாவில், ராம ஜென்ம பூமி அமைந்துள்ள இடத்தில், பல கோடி ரூபாய் செலவில், பிரமாண்ட ராமர் கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது. ராமர் கோயிலுக்கான உற்ஸவ மூர்த்திகளான ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் உற்ஸவர் விக்ரகங்கள் பஞ்சலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள், ஹிந்து பரிரக் ஷண சமிதி சார்பில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.



latest tamil news

இந்த விக்ரகங்களுக்கு, முதல் முறையாக சென்னை, தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வேங்கடேச பெருமாள் கோயிலில், 16 புண்ணிய நதிகளின் நீருடன் சேர்த்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, கோயில் அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு உற்ஸவ மூர்த்திகள் வைக்கப்பட்டன. அங்கு, நாம சங்கீர்த்தனம், பஜன்கள் நடந்தன.



இன்று முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கும் இந்த உற்ஸவ மூர்த்திகள், அயோத்தி ராமர் கோயில் சம்ப்ரோக்ஷணம் நடக்கும் போது, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என, ஹிந்து பரிரக் ஷண சமீதியினர் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (6)

japaankaaran - Tokyo,ஜப்பான்
16-செப்-202111:29:15 IST Report Abuse
japaankaaran திமுகவின் அன்னதான திட்டத்த பத்தி நியூஸ் இல்லயே.
Rate this:
Cancel
J Ganesh -  ( Posted via: Dinamalar Android App )
16-செப்-202107:34:25 IST Report Abuse
J Ganesh 0...
Rate this:
Cancel
Neutral Umpire - Chennai ,இந்தியா
16-செப்-202105:45:59 IST Report Abuse
Neutral Umpire இதை வெச்சு ஒரு கலெக்ஷன் பாக்கறது கஷ்டமா இருக்கு ..இது மாதிரி திருப்பதியிலிருந்து குடை எடுத்து வந்து கிராமம் கிராமமே கலெக்ஷன் ,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X