பொது செய்தி

தமிழ்நாடு

அயோத்தி ராமர் கோவில் உற்சவருக்கு தி.நகர் கோவிலில் சிறப்பு பூஜை

Added : செப் 16, 2021
Share
Advertisement
சென்னை- -அயோத்தியில் கட்டப்பட்டு வரும், ராமர் கோவிலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள, பஞ்சலோகத்தால் ஆன, உற்சவ மூர்த்தி விக்ரஹ ங்களுக்கு, முதன் முதலாக சென்னை தி.நகரில் உள்ள, திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியாவில், ராம ஜன்ம பூமி அமைந்துள்ள இடத்தில், பல கோடி ரூபாய் செலவில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டும்

சென்னை- -அயோத்தியில் கட்டப்பட்டு வரும், ராமர் கோவிலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள, பஞ்சலோகத்தால் ஆன, உற்சவ மூர்த்தி விக்ரஹ ங்களுக்கு, முதன் முதலாக சென்னை தி.நகரில் உள்ள, திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியாவில், ராம ஜன்ம பூமி அமைந்துள்ள இடத்தில், பல கோடி ரூபாய் செலவில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது.ராமர்கோவிலுக்கான உற்சவ மூர்த்திகளான ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் உற்சவர் விக்ரஹங்கள் பஞ்சலோகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள், ஹிந்து பரிரக் ஷண சமிதி சார்பில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.இந்த விக்ரகங்களுக்கு, முதல் முறையாக சென்னை, தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வேங்கடேச பெருமாள் கோவிலில், 16 புண்ணிய நதிகளின் நீருடன் சேர்த்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.இதையடுத்து, கோவில் அரங்கில் பொதுமக்கள் பார்வைக்கு உற்சவ மூர்த்திகள் வைக்கப்பட்டன. அங்கு, நாம சங்கீர்த்தனம், பஜன்கள் நடந்தன.இன்று முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கும் இந்த உற்சவ மூர்த்திகள், அயோத்தி ராமர்கோவில் சம்ப்ரோக்ஷணம் நடக்கும் போது, கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என, ஹிந்து பரிரக் ஷண சமீதியினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X