பொது செய்தி

தமிழ்நாடு

நோயாளியின் உதவியாளர் உணவு அருந்த ராஜிவ்காந்தி மருத்துவமனையில் தனி அறை

Added : செப் 16, 2021
Share
Advertisement
சென்னை-ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் உதவியாளர்களுக்காகவே, பிரத்யேக உணவு அருந்தும் அறை திறக்கப்பட்டுள்ளது.சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், தினசரி, 12 ஆயிரம் புறநோயாளிகள், 3,000 உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள் நோயாளிகளின் உதவிக்காக, உறவினர் ஒருவர் அனுமதிக்கப்படுவது வழக்கம். அவர்களின் வசதிக்காக, பிரத்யேகமாக, ஒவ்வொரு தளத்திலும்,
 நோயாளியின் உதவியாளர் உணவு அருந்த ராஜிவ்காந்தி மருத்துவமனையில் தனி அறை

சென்னை-ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், நோயாளிகளின் உதவியாளர்களுக்காகவே, பிரத்யேக உணவு அருந்தும் அறை திறக்கப்பட்டுள்ளது.சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், தினசரி, 12 ஆயிரம் புறநோயாளிகள், 3,000 உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள் நோயாளிகளின் உதவிக்காக, உறவினர் ஒருவர் அனுமதிக்கப்படுவது வழக்கம். அவர்களின் வசதிக்காக, பிரத்யேகமாக, ஒவ்வொரு தளத்திலும், ஒரு அறை என, 15க்கும் மேற்பட்ட அறைகள், உணவு அருந்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.இந்த அறைகளை, மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ்கள், நோயாளிகளின் உறவினர்கள் திறந்து வைத்தனர். மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் உடனிருந்தார்.பின், முதல்வர் தேரணிராஜன் அளித்த பேட்டி:மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை, உடன் இருந்து கவனித்து கொள்வதற்கும், அவர்களை பார்ப்பதற்கும், அவர்களது உறவினர்கள் வந்து செல்கின்றனர். நோயாளிகளை கவனித்து கொள்ள வரும் பலர், மருத்துவமனையிலேயே தங்கி, வளாகத்திலேயே உணவு அருந்துகின்றனர். இதனால், சாப்பிடும்போது, உணவு பொருட்கள் அங்குமிங்குமாக சிதறி, சுகாதாரமற்ற நிலை உருவாகிறது. எனவே, நோயாளிகளின் உதவியாளர்களுக்கென, பிரத்யேகமாக உணவு அருந்தும் அறைகள்,ஒவ்வொரு தளத்திலும் திறக்கப்பட்டுள்ளது. ஒரு அறையில், ஒரே நேரத்தில் ஆறு பேர் அமர்ந்து சாப்பிட முடியும். அங்கு, சுத்தமான குடிநீர், மின் விசிறி, மேஜை, நாற்காலி, குப்பை தொட்டி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த அறை தினமும் காலை, 7:00 மணி முதல் 9:00 மணி வரையிலும், மதியம் 12:00 மணி முதல், 2:00 மணி வரையிலும், இரவு, 7:00 மணி முதல் 9:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.இந்த அறைகளை தினமும் பராமரிக்க சிறப்பு குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை, பொதுமக்களிடையே நிச்சயம் வரவேற்பை பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X