பொது செய்தி

தமிழ்நாடு

செல்வமகள் சேமிப்பு திட்டம்: தமிழக அரசு வேண்டுகோள்

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை: 'பெண் குழந்தைகள் பயன் பெற, செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேருங்கள்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.அரசின் செய்திக்குறிப்பு: தமிழக அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்திய அஞ்சல் துறை சார்பில், செல்வமகள் சேமிப்பு திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது.பத்து வயதுக்குட்பட்ட பெண்
Sukanya Samriddhi Yojana schemes, Selva Magal Semippu Thittam, Post Office Schemes, TN govt

சென்னை: 'பெண் குழந்தைகள் பயன் பெற, செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சேருங்கள்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசின் செய்திக்குறிப்பு: தமிழக அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்திய அஞ்சல் துறை சார்பில், செல்வமகள் சேமிப்பு திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு இரண்டு பெண் குழந்தைகள், இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இக்கணக்கை துவக்க குறைந்தபட்சம் 250 ரூபாய் செலுத்த வேண்டும். ஆண்டுக்கு குறைந்தபட்சமாக 250 ரூபாய்; அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை செலுத்தலாம்.


latest tamil news



சேமிக்கும் தொகைக்கு ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி பெறலாம். இத்திட்டத்தின் முதிர்வு தொகையில், 50 சதவீதம் வைப்புத் தொகையை, பெண் குழந்தையின் மேல் படிப்புக்காக பெற்றுக் கொள்ளலாம். முதிர்வுத் தொகையை, பெண் குழந்தையின் திருமணத்தின்போதும்; 21 வயது நிறைவடைந்ததும் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் முதிர்வுத் தொகைக்கு வரிவிலக்கு உண்டு. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - madurai,இந்தியா
16-செப்-202115:02:38 IST Report Abuse
raja // தமிழக அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக, பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில்...செல்வமகள் சேமிப்பு திட்டம் ...// - அந்த அளவிற்கு தமிழன் மடயானா?
Rate this:
Cancel
raja - Doha,கத்தார்
16-செப்-202114:33:57 IST Report Abuse
raja இப்படி எல்லாம் சேமித்து பெற்றோர்கள் பெண் பிள்ளைகளை படிக்கவைப்பார்கள் திருட்டு திராவிடம், கலப்பு திருமணம் என்கிற பெயரில் நீங்கள் கூத்து ஆடிப்பீர்கள் அப்புறம் பெற்றோர்கள் ஆணவ கொலை செய்தார்கள் என்று வழக்கு வேறு போங்கடா நீங்களும் உங்கள் திட்டமும்.....
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
16-செப்-202112:49:54 IST Report Abuse
sridhar Copy paste .. no shame .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X