மாஜிக்களுடன் கைகோர்த்து சொத்து சேர்த்த அதிகாரிகள்: ஆவணங்களை மாற்ற பதிவுத்துறை விதிகளை மீறினார்களா? | Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

'மாஜி'க்களுடன் கைகோர்த்து சொத்து சேர்த்த அதிகாரிகள்: ஆவணங்களை மாற்ற பதிவுத்துறை விதிகளை மீறினார்களா?

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (2)
Share
கோவை : கோவை உள்பட மேற்கு மண்டல பகுதியில் பணியாற்றிய பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர்களுக்கு உடந்தையாக ஆவணங்களை கைமாற்ற பதிவுத்துறை விதிகளை மீறினார்களா என, விசாரணை நடக்கிறது.கோவை, நீலகிரி, திருப்பூர் உள்பட மேற்கு மண்டல பகுதியில் பத்திரப்பதிவு துறையில் பணியாற்றி வந்த மாவட்ட பதிவாளர்கள், உதவி ஐ.ஜி.,க்கள் உள்பட ஏழு பேர் ஆட்சி மாற்றத்துக்கு பின் அதிரடியாக
'மாஜி'க்களுடன் கைகோர்த்து சொத்து சேர்த்த அதிகாரிகள்: ஆவணங்களை மாற்ற பதிவுத்துறை விதிகளை மீறினார்களா?

கோவை : கோவை உள்பட மேற்கு மண்டல பகுதியில் பணியாற்றிய பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர்களுக்கு உடந்தையாக ஆவணங்களை கைமாற்ற பதிவுத்துறை விதிகளை மீறினார்களா என, விசாரணை நடக்கிறது.

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்பட மேற்கு மண்டல பகுதியில் பத்திரப்பதிவு துறையில் பணியாற்றி வந்த மாவட்ட பதிவாளர்கள், உதவி ஐ.ஜி.,க்கள் உள்பட ஏழு பேர் ஆட்சி மாற்றத்துக்கு பின் அதிரடியாக மாற்றப்பட்டனர். இவர்களில், 6 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, எந்த பதவியும் வழங்கப்படாமல் உள்ளனர்.கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர்கள் உள்பட கட்சியினர் பலர் சொத்துக்கள் வாங்கி குவிக்க பதிவுத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக புகார் உள்ளது. வழிகாட்டி மதிப்புகளை குறைத்து ஏராளமான பத்திர பதிவுகள் செய்துள்ளதாகவும், வரன்முறைப்படுத்தாத நிலங்களை அதிகளவு பதிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இதற்கு கைமாறாக கிடைத்த லஞ்ச பணத்தில் தான் அதிகாரிகள் அவர்கள் மற்றும் உறவினர்களின் பெயரில் சொத்துக்களை வாங்கி உள்ளதாக எழுந்துள்ள புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.முதல் கட்ட விசாரணையில் சில தகவல் கிடைத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் எடுக்கப்பட்ட ஆவணங்களில் இருந்து சொத்து மாறுதல் போன்ற விஷயங்கள் நடக்க பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்தார்களா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டபோது, துறை ரீதியாக நடத்தப்படும் விசாரணை குறித்து தங்களால் தகவல் எதுவும் தெரிவிக்க இயலாது என, பதிலளித்தனர்.விபரம் அறிந்த பதிவுத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:கடந்த ஆட்சியில் பதிவுத்துறை அமைச்சர் மற்றும் சில முக்கிய அமைச்சர்களுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது. ஆனாலும் மேற்கு மண்டலத்தில் பணியாற்றிய பதிவுத்துறை டி.ஐ.ஜி., - ஏ.ஐ.ஜி., மாவட்ட பதிவாளர்கள் சார்பதிவாளர்கள் கொங்கு மண்டல அமைச்சர்களுக்கு நெருக்கமாக இருந்தனர். இவர்கள் கூறியபடியே கேட்டு நடந்தனர். இப்போது ஆட்சி மாற்றத்துக்கு பின், சில அதிகாரிகள் தப்பித்து கொண்டு மற்றவர்களை மாட்டி விடுகின்றனர்.கோவை உள்பட மேற்கு மண்டல பகுதியில் பணியாற்றிய அதிகாரிகள் பலரும் கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இப்போது சிலர் மட்டுமே பெருமளவில் சம்பாதித்ததுபோலவும், மற்றவர்கள் நேர்மையாக தான் இருந்தார்கள் என்பது போலவும் சித்தரிக்க முயற்சி நடக்கிறது. கோடநாடு விவகாரத்தை திசை திருப்ப, இதை செய்வதாக சந்தேகம் எழுகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X