தமிழ்நாடு

'குறுநில மன்னர்கள்': ஒரே ஸ்டேஷனில் 'ராஜாங்கம்' நடத்தும் போலீசார்: இடமாற்றம் மூலம் களையெடுப்பாரா கமிஷனர்

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூரில் மூன்று ஆண்டுகளாக ஒரே ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.சூழ்நிலைகளை சாதகமாக்கி, இடமாற்றத்தில் இருந்து தப்பி, 'குறுநில மன்னர்' போல செயல்படும் போலீசார் மீது, அதிரடி நடவடிக்கை அவசியமாகிறது.திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகம், 2014ல் துவங்கப்பட்டது; எட்டு போலீஸ் ஸ்டேஷன்கள், தலா இரண்டு போக்குவரத்து மற்றும் மகளிர் போலீஸ்
'குறுநில மன்னர்கள்': ஒரே ஸ்டேஷனில்  'ராஜாங்கம்' நடத்தும் போலீசார்: இடமாற்றம் மூலம் களையெடுப்பாரா கமிஷனர்

திருப்பூர் : திருப்பூரில் மூன்று ஆண்டுகளாக ஒரே ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.சூழ்நிலைகளை சாதகமாக்கி, இடமாற்றத்தில் இருந்து தப்பி, 'குறுநில மன்னர்' போல செயல்படும் போலீசார் மீது, அதிரடி நடவடிக்கை அவசியமாகிறது.

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரகம், 2014ல் துவங்கப்பட்டது; எட்டு போலீஸ் ஸ்டேஷன்கள், தலா இரண்டு போக்குவரத்து மற்றும் மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களும் செயல்படுகின்றன. இந்த, 12 ஸ்டேஷன்களில், ஒவ்வொரு ஸ்டேஷனிலும், 20ல் இருந்து, 30 பேர் பற்றாக்குறை உள்ளது. ஸ்டேஷனில் இருக்கும் சில போலீசார் மருத்துவமனை, கோர்ட் சார்ந்த ஏதாவது ஒரு பணிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், ரோந்து பணி பாதிக்கப்படுகிறது. ஸ்டேஷன் பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது.ஐந்து பேர் பார்க்கக்கூடிய வேலைகளை, ஒரே போலீசார் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. சட்டம்-ஒழுங்கு, குற்றத்தடுப்பில் ஈடுபடுதல், போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.


தனி ராஜாங்கம்


போலீஸ் பற்றாக்குறையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, சில போலீசார், ஒரே ஸ்டேஷன்களில் பல ஆண்டுகளாக 'தனி ராஜ்ஜியம்' நடத்தி வருகின்றனர். புகார் கொடுக்க ஸ்டேஷனுக்கு வருவோரிடம், தங்களுக்கு ஏதாவது ஆதாயம் தேடி கொள்கின்றனர்.சிலர், உயரதிகாரிகள் மற்றும் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு தெரியாமல், லாட்டரி, மதுக்கடைகள் என சட்டவிரோத செயல்கள் மூலம் பணம் கறக்கின்றனர்.


latest tamil news
பட்டியல் தயார்


திருப்பூர் போலீஸ் கமிஷனர் வனிதா நேற்று முன்தினம் மாநகரில் உள்ள ஸ்டேஷன்களில், மூன்று ஆண்டுகளை கடந்து பணியாற்றும், 83 போலீசாரின் பட்டியல் ஒன்று தயாரித்து, விருப்ப பணி மாறுதலுக்காக ஸ்டேஷன்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.அதில், ஸ்டேஷன் வாரியாக, சம்பந்தப்பட்ட போலீசார், தற்போது பணியாற்றும் ஸ்டேஷன், இதற்கு முன் பணியாற்றிய ஸ்டேஷன் தவிர்த்து, மூன்று ஸ்டேஷன்களை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த விபரங்கள் அடங்கிய பட்டியலை உடன டியாக கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில் போலீசார் இடமாற்றம் விரைவில் நடக்க உள்ளது.


'பெவிலியன்'திரும்ப விடலாமா?


துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்களுக்கு, சில போலீசார் வளைந்து கொடுத்து தங்கள் இருப்பிடத்தை தக்க வைத்து கொள்கின்றனர்.இதனால், ஏதாவது குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி ஸ்டேஷன் விட்டு, வேறு ஸ்டேஷன்களுக்கு மாற்றப்பட்டாலும், மீண்டும் திரும்பி விடுகின்றனர். ''ஸ்டேஷன் வேலை அப்படியே இருக்கிறது. அவர் இருந்தால் தான் வேலை நடக்கும்'' என்று இன்ஸ்பெக்டர், உயரதிகாரிகளிடம் கூறி, 'பெவிலியன்' திரும்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

குறிப்பாக, ஒவ்வொரு ஸ்டேஷன்களிலும் ஒற்றை இலக்கில், சிலர் இதுபோல் 'நங்கூரமாக' உள்ளனர். இவர்கள் அவ்வப்போது, பெயரளவுக்கு வேறு ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டு, 'டூயிங் டியூட்டி' என்று மீண்டும் அதே இடத்துக்கு திரும்புகின்றனர். மீண்டும் பழைய இடத்துக்கு திரும் புவதை தடுத்தால் மட்டுமே, இடமாற்றத்துக்கான பலனை முழுமையாக அறுவடை செய்ய முடியும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-செப்-202114:28:48 IST Report Abuse
Ramesh Sargam 'குறுநில மன்னர்கள்' - இது இன்று நேற்றா நடக்கிறது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த 'குறுநில மன்னர்கள்' ஆட்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, அப்பொழுதுள்ள ஆட்சியாளர்களின் உதவியால். இதை மட்டும் தமிழ் நாடு பூராவும், அதாவது இந்த 'களையெடுப்பு' முறையை தமிழ் நாடு பூராவும் செய்தால், சிறப்பாக இருக்கும். அதற்கான உரிமையை வொவொரு கமிஷனர்களுக்கும் அரசு கொடுக்கவேண்டும், எந்த வித தலையீடும் இருக்கக்கூடாது.
Rate this:
Cancel
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
16-செப்-202111:36:48 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRN போதை பொருள் கடத்தல் புள்ளிகள் அதிகம் சுற்றித்திரியும் நகரம் திருப்பூர். அவர்கள் ஆப்பிரிக்கர்கள்////எத்தனை பேர் விசா காலாவதி ஆகி உள்ளது, எத்தனை பேர் கள்ளத்தனமாக தங்கியிருக்கிறார்கள், அவர்கள் தங்கியுள்ள வீடு///விடுதி உரிமையாளர்கள் யார் யார் என்ற பட்டியலையும் உடனே தயாரியுங்கள் மேடம், ரொம்ப புண்ணியமாய்ப் போகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X