பொய்களை நம்ப வேண்டாம்: அண்ணாமலை அறிவுரை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொய்களை நம்ப வேண்டாம்: அண்ணாமலை அறிவுரை

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (93)
Share
சென்னை : 'தற்கொலைக்கு துாண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள்' என மாணவர்களுக்கு பா.ஜ. மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுரை வழங்கி உள்ளார்.அவரது அறிக்கை: மாணவர்களே உங்கள் கனவை மேலும் விரிவாக்குங்கள். மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்காவிட்டால் உலகம் இருண்டுபோகப் போவதில்லை. விடாமுயற்சியும் திறமையும் இருந்தால் பணமில்லாத
Annamalai, BJP, NEET

சென்னை : 'தற்கொலைக்கு துாண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள்' என மாணவர்களுக்கு பா.ஜ. மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுரை வழங்கி உள்ளார்.

அவரது அறிக்கை: மாணவர்களே உங்கள் கனவை மேலும் விரிவாக்குங்கள். மருத்துவப் படிப்பிற்கு இடம் கிடைக்காவிட்டால் உலகம் இருண்டுபோகப் போவதில்லை. விடாமுயற்சியும் திறமையும் இருந்தால் பணமில்லாத ஏழைக்கும் வெற்றி நிச்சயம்.தற்கொலைக்கு துாண்டும் சில பொய்யான பரப்புரையை நம்பி விலைமதிப்பற்ற உங்கள் உயிரை இழக்காதீர்கள்.


latest tamil news



உங்களால் தேர்ச்சி பெற முடியாவிட்டால் உங்கள் பயிற்சி முறையிலோ பாடத்திட்ட முறையிலோ தேர்வுக்கு தயாரகும் முறையிலோ மாற்றம் தேவைப்படுகிறது என்பதை உணருங்கள். உங்களை நேசிக்க துவங்குங்கள். புத்தகங்களை வாசிக்க துவங்குங்கள். பெரியோரிடம் அறிவுரைகளை யாசிக்க துவங்குங்கள். தேர்வுகளை கடப்பது எப்படி என யோசிக்க துவங்குங்கள். படிப்பின்மீது பிடிப்போடு இருங்கள். நாளைய உலகம் உங்களுடையது. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X