பொது செய்தி

தமிழ்நாடு

நடைமுறைக்கு வந்தது பி.எச்., வாகன பதிவெண்

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: நாடு முழுதும் பயன்படுத்தும் வாகனங்களுக்கான, 'பி.எச்., பதிவெண்' முறை, நேற்று நடைமுறைக்கு வந்தது.வாகனங்கள் பதிவின் போது, மாநிலத்தின் முதல் எழுத்தை பதிவது வழக்கம். ஒரு மாநிலத்தில் இருந்து, வேறு மாநிலத்துக்கு இடம் மாறினால், பதிவு எண்ணை மாற்ற வேண்டும். பதிவு செய்த மாநிலத்தில் தடையில்லா சான்று பெற்று, தங்கியுள்ள மாநிலத்தில், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்து, வாகன
BH series, vehicle registration, BH number plate

சென்னை: நாடு முழுதும் பயன்படுத்தும் வாகனங்களுக்கான, 'பி.எச்., பதிவெண்' முறை, நேற்று நடைமுறைக்கு வந்தது.

வாகனங்கள் பதிவின் போது, மாநிலத்தின் முதல் எழுத்தை பதிவது வழக்கம். ஒரு மாநிலத்தில் இருந்து, வேறு மாநிலத்துக்கு இடம் மாறினால், பதிவு எண்ணை மாற்ற வேண்டும். பதிவு செய்த மாநிலத்தில் தடையில்லா சான்று பெற்று, தங்கியுள்ள மாநிலத்தில், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்து, வாகன பதிவு எண்ணை மாற்றிக் கொள்ளலாம்; உரிய சாலை வரி செலுத்த வேண்டும்.

இதில், மாநிலத்துக்கு மாநிலம் சாலை வரியில் உள்ள மாறுபாடு, ஏற்கனவே இருந்த மாநிலத்தில் பயன்படுத்தாத ஆண்டுகளுக்கான சாலை வரியை திரும்பப் பெறுவதில் சிக்கல் என, பல பிரச்னைகள் உள்ளன.அதிலும், வியாபார ரீதியாகவோ, பணி ரீதியாகவோ அடிக்கடி மாநிலம் விட்டு மாநிலம் செல்வோருக்கு, இந்த முறையால் பல சிக்கல்களை அனுபவிக்கும் நிலை உள்ளது.


latest tamil newsஇந்நிலையில், மாநிலம் விட்டு மாநிலம் அடிக்கடி இடம்பெயர்வோரின் வாகனங்களுக்கு ஒரே மாதிரியான பதிவெண் வழங்கும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், பி.எச்., எனும் ஆங்கில எழுத்து வரிசையுடன், பதிவெண்களை வழங்க திட்டமிட்டது. இதற்கான அறிவிப்பு, கடந்த மாதம் 15ம் தேதி வெளியிடப்பட்டது.

இது குறித்து, ஆட்சேபம் தெரிவிக்க வழங்கப்பட்ட 30 நாட்கள் கெடு நேற்று முன்தினம் முடிந்தது. இதையடுத்து, நாடு முழுதும் நேற்று முதல், பி.எச்., வரிசை பதிவெண் முறை அமலாகியுள்ளது. இனி, மாநிலம் விட்டு மாநிலம், வாகனத்தை இடம் மாற்றி உபயோகிப்போர், மத்திய அரசின், 'வாகன்' இணையதளத்தில், விண்ணப்ப படிவம் - 60ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

அவர்களுக்கு, 'பாரத்' என்ற வார்த்தையின் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்களான பி.எச்., எனும் வரிசையில் உள்ள பதிவெண்களை பெறலாம். இந்த பதிவெண், மத்திய சாலை போக்குவரத்து தரவு தரத்தின் வாயிலாக பதிவு செய்யப்படுவதால், மாநிலங்களுக்குள் பிரச்னை வராது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-செப்-202113:33:02 IST Report Abuse
Ramesh Sargam என்னதான் புது புது மாறுதல்கள் வந்தாலும், போக்குவரத்து அலுவலகங்களில் மாறாத ஒன்று - லஞ்சம் வாங்குவது முழுவதுமாக போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிப்பது என்பது முடியாத காரியம்...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
16-செப்-202112:41:32 IST Report Abuse
sankaseshan ஒரே நாடு ஒரே அடையாளம் Well done மத்திய அரசு மாற்றத்தை விரும்பாத வர்கள் கதறலாம்
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
16-செப்-202109:48:46 IST Report Abuse
Svs Yaadum oore இந்த வசதி அரசு ஊழியர்களுக்கு மட்டும் இல்லை. வெளி மாநிலங்களில் அலுவலகம் இருந்தால் தனியார் நிறுவன கம்பெனி ஊழியரும் இந்த வசதி உண்டு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X