பொது செய்தி

இந்தியா

'ஸ்விக்கி, ஸொமேட்டோ'வுக்கு ஜி.எஸ்.டி., அமலாகுமா?

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், நாளை நடைபெற உள்ள ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஓட்டல்களிலிருந்து வீடுகளுக்கு உணவு 'சப்ளை' செய்யும், 'ஸ்விக்கி, ஸொமேட்டோ' போன்ற உணவு சேவை நிறுவனங்களை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து, விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.அப்படி கொண்டு வந்தால், 'ஆன்லைன்' வாயிலாக நாம் வாங்கும் உணவுகளுக்கான ஜி.எஸ்.டி.,யை
GST, swiggy, zomato

புதுடில்லி: உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், நாளை நடைபெற உள்ள ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஓட்டல்களிலிருந்து வீடுகளுக்கு உணவு 'சப்ளை' செய்யும், 'ஸ்விக்கி, ஸொமேட்டோ' போன்ற உணவு சேவை நிறுவனங்களை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து, விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி கொண்டு வந்தால், 'ஆன்லைன்' வாயிலாக நாம் வாங்கும் உணவுகளுக்கான ஜி.எஸ்.டி.,யை உணவகங்களிடம் இருந்து பெற்று, அதை உணவு சப்ளை செய்யும் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்தும். இதனால், தற்போதுள்ள விலை உயர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.


latest tamil news



மேலும், வீட்டில் சமையல் மட்டும் செய்து அதை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யும், 'கிளவுட் கிச்சன்' தொழில் செய்வோரும், உணவக சேவை வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டு, அவர்களுக்கு ஐந்து சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-செப்-202108:14:05 IST Report Abuse
Lion Drsekar பெரிய கடைகளில் ஜி எஸ் டீ இருப்பதால் , அவர்களுக்காகவே வாகனங்கள் செல்லும் ரோட்டின் அளவைக் குறைத்து நடைபாதைகளை அடிக்கப்படுத்தியதால் தினமும் காலையில் அவர்களது பொருட்களை வாகனங்களில் இருந்து இறக்கி மாலை நேரங்களில் எடுத்து செய்கிறார்கள் ?? திரைப்படத்தில் வருவதுபோல் இப்போ என்ன செய்வீங்க இப்போ என்ன செய்வீங்க என்பது போல் இருக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X