பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த அதிமுக ஆட்சியின் போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து
ExMinister, KCVeeramani, Vigilance, DVAC, Anti Corruption, அதிமுக, முன்னாள் அமைச்சர், வீரமணி, லஞ்ச ஒழிப்புத்துறை, சோதனை

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அதிமுக ஆட்சியின் போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இன்று (செப்.,16) காலையில் இருந்து சென்னையில் மட்டும் நான்கு இடங்களிலும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் அவருக்கு சொந்தமாக உள்ள, திருமண மண்டபம், வீடு, நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட 28 இடங்களில் அதிரடி சோதனையில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். பெங்களூரிலும் இவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது.


latest tamil news


அதேபோல், திருவண்ணாமலையின் குருவிமலை கிராமத்தில் உள்ள வீரமணியின் உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். வருமானத்திற்கு அதிகமாக 654 சதவீதம் சொத்துக்கள் சேர்த்ததாக வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சோதனை நடைபெறும் இடங்களிலுக்கு வெளியே அதிமுக தொண்டர்கள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


ஏற்கனவே அ.தி.மு.க., முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணி ஆகியோர் வீடுகளிலும் வருமானவரி சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், தற்போது கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் - கைப்பற்றப்பட்டவைகள்னு ஒரு சின்ன லிஸ்ட் (பெரிய சொத்துக்கள்) வெளியிட்டிருக்கே லஞ்ச ஒழிப்பு துறை
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
16-செப்-202123:11:57 IST Report Abuse
Anantharaman Srinivasan நாட்டில் அரசியல் வியாபாரமாகி 55 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. இனியும் சுருட்டாமல் யோக்கியமான அரசியல்வாதியை எதிர்பார்ப்பவன் வடிகட்டிய பைத்தியகாரனாகத்தான் இருப்பான்... தேர்தல் ஒழுங்கா நடந்தால்தானே யோக்கியன் வேட்பாளராக போட்டி போட முடியும். பணம் படைத்தவன் கோடிகளை செலவு செய்து கேடி தனமாக ஜெயித்து ஆயிரம் கோடிகளை சூருட்டுகிறான்..
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
16-செப்-202121:55:09 IST Report Abuse
Vittalanand அப்படியே செந்தாமரை \சபரீசன் வீட்டிலும் ரெய்டு செய்யும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X