ஐ.எஸ்., அமைப்பில் இஸ்லாமிய பெண்; லண்டன் திரும்ப மன்னிப்பு கோரினார்

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
லண்டன்: ஐ.எஸ்., அமைப்பில் இணைய லண்டனில் இருந்து சிரியாவுக்கு சென்ற இஸ்லாமிய பெண், பிரிட்டன் பிரதமரிடம் மன்னிப்பு கோரியதோடு, மீண்டும் நாடு திரும்புவதற்கு அனுமதி வழங்கவும், கோரிக்கை வைத்துள்ளார்.பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த ஷமீமா பேகம், 22, என்ற இஸ்லாமிய பெண், 2015ம் ஆண்டு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணைய, நாட்டை விட்டு வெளியேறி சிரியாவுக்கு சென்றார். அங்கு சென்று, ஐ.எஸ்.,
IS, Shamima Begum, Apologises, Brits, Return to UK,

லண்டன்: ஐ.எஸ்., அமைப்பில் இணைய லண்டனில் இருந்து சிரியாவுக்கு சென்ற இஸ்லாமிய பெண், பிரிட்டன் பிரதமரிடம் மன்னிப்பு கோரியதோடு, மீண்டும் நாடு திரும்புவதற்கு அனுமதி வழங்கவும், கோரிக்கை வைத்துள்ளார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த ஷமீமா பேகம், 22, என்ற இஸ்லாமிய பெண், 2015ம் ஆண்டு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணைய, நாட்டை விட்டு வெளியேறி சிரியாவுக்கு சென்றார். அங்கு சென்று, ஐ.எஸ்., அமைப்பில் இணைந்த பேகம், அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவரையும் மணம் முடித்தார். அவருக்கு பிறந்த, மூன்று குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பின், அவரை மீட்ட ராணுவத்தினர், அங்குள்ள அகதிகள் முகாமில், அவரை தங்கவைத்தனர்.


latest tamil news


ஐ.எஸ்., அமைப்பில் இருந்து விலகி, இதர மக்களைப் போல் வாழ்க்கையை நடத்த எண்ணும் பேகம், மீண்டும் பிரிட்டனுக்கு நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து வருகிறார். எனினும், அவரின் குடியுரிமையை ரத்து செய்து, பிரிட்டன் அரசு அறிவித்தது. பின், பிரிட்டன் பிரிட்டன் நீதிமன்றங்களிலும் ஷமீமா முறையிட்டார். எனினும், அவரின் கோரிக்கை நீதிமன்றங்களில் நிராகரிப்பட்டன. இந்நிலையில், ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள ஷமீமா கூறியதாவது:


latest tamil news


நான் எதை கூறினாலும், அதை சிலர் நம்பமாட்டார்கள் என, எனக்கு நன்றாக தெரியும். நான் இதற்கு முன் எடுத்த ஒவ்வொரு முடிவுக்கும் இன்றுவரை வருந்துகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். பிரிட்டன் பிரதமரிடம் ஒன்றை தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட, நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன். நான் தவறு செய்ததாக நீங்கள் நினைத்தால், என்னை பிரிட்டனுக்கு அழைத்துச் சென்று, என்னிடம் விசாரணை நடத்துங்கள். நான் ஐ.எஸ்., அமைப்பில் இணைந்து எதையும் செய்யவில்லை என்பது அப்போது தான் உங்களுக்கு புரியவரும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naz Malick - London,யுனைடெட் கிங்டம்
17-செப்-202104:39:05 IST Report Abuse
Naz Malick ஷமீமா பேகம் பதினாலு வயதில் சிறு பிள்ளையாக இருக்கும் பொது பைத்தியகாரமாக சிரியா சென்று மாட்டி கொண்டார் . அவருடைய பிரித்தானிய அந்தஸ்தை ரத்து செய்ததே சாஜித் ஜாவித் என்ற பாகிஸ்தானிய வம்சாய் வழி மந்திரி தான். ஆனாலும் இங்கே பிறந்த பேகம் அடுத்த வருஷத்துக்குள் சட்ட சிக்கலை முடித்து லண்டனுக்கு வந்து விடுவார்.
Rate this:
Cancel
16-செப்-202121:58:19 IST Report Abuse
theruvasagan ஆப்கானிஸ்தான் போகலாம். அங்க இப்ப ஏகப்பட்ட டிமாண்டு. வளமான எதிர்காலம் காத்திருக்கிறது. மார்க்கமும் மூர்க்கமும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கறதுதான் இயல்பு.
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
16-செப்-202120:11:53 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் பிரிட்டன் அரசு நல்ல முடிவெடுத்துள்ளது இந்தியாவும் இது போன்ற நடைமுறையைப் பின்பற்றவேண்டும் உலகம் முழுவதுமே ஒன்றுதிரண்டு மத அடிப்படைவாதிகளை வேட்டையாடும் காலம் வந்துவிட்டது தஜ்ஜால் ஒருவன் அல்ல அது ஒரு கூட்டம் என்று கூடிய சீக்கிரம் புரிய வரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X