சென்னை: ‛‛தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும்,'' என அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு அக்., 6, 9ல், இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று (செப்.,15) துவங்கியது. இத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பா.ம.க., நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. அந்த வரிசையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட டுவிட்டர் பதிவு:
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது.
9 மாவட்டங்களிலும் பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.
களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே.
— Kamal Haasan (@ikamalhaasan) September 16, 2021
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE