பொது செய்தி

இந்தியா

கோவிட் தொற்று 6 மாதங்களுக்குள் கட்டுக்குள் வரும்; சாதாரண காய்ச்சலாக மாறும்: என்.சி.டி.சி., தலைவர் உறுதி

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: '‛இந்தியாவில் கோவிட் வைரஸ் எண்டெமிக் நோயாக மாறும்,'' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில், தேசிய நோய் தடுப்பு மையத்தின் தலைவர் சுஜித் சிங் தெரிவித்துள்ளதாவது:உருமாற்றம் அடைந்த புதிய கோவிட் டெல்டா வைரசால் மட்டும் 3வது அலையை உருவாக்கிட முடியாது. இந்த பெருந்தொற்று நம்முடைய பெரும்பாலான கணிப்புகளை பொய்யாக்கி உள்ளது. இந்தியாவில் அடுத்த ஆறு
Covid19, Covid Becoming Endemic, Manageable In 6 Months, Infection becoming more manageable, health infrastructure, Health Body Chief, Sujeet Singh, கோவிட் தொற்று, 6 மாதங்களுக்குள் கட்டுக்குள் வரும், சாதாரண காய்ச்சல், என்சிடிசி தலைவர் உறுதி,

புதுடில்லி: '‛இந்தியாவில் கோவிட் வைரஸ் எண்டெமிக் நோயாக மாறும்,'' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில், தேசிய நோய் தடுப்பு மையத்தின் தலைவர் சுஜித் சிங் தெரிவித்துள்ளதாவது:

உருமாற்றம் அடைந்த புதிய கோவிட் டெல்டா வைரசால் மட்டும் 3வது அலையை உருவாக்கிட முடியாது. இந்த பெருந்தொற்று நம்முடைய பெரும்பாலான கணிப்புகளை பொய்யாக்கி உள்ளது. இந்தியாவில் அடுத்த ஆறு மாதங்களுக்குள், கோவிட் வைரஸ் எண்டெமிக் நிலையை அடையும். மக்கள் மத்தியில் பரவல் தொடர்ந்து இருக்க போகிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது. ஆனால், சாதாரண காய்ச்சலை போன்று இதைக் கையாண்டுவிட முடியும்.


latest tamil news


கோவிட் வைரஸ் எண்டெமிக் நிலையை அடையும் என்றால், அதன் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். நமது சுகாதார கட்டமைப்புக்குக் கோவிட் வைரசைக் கட்டுப்படுத்துவது எளிதாகிவிடும். கோவிட் வைரசுக்கு எதிரான மிகப் பெரிய பாதுகாப்பு அரணாக தடுப்பூசி திகழ்கிறது.

நாட்டில் 75 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி செயல்திறன் 70 சதவீதமாக இருந்தால், இந்தியாவில் சுமார் 50 கோடி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது. ஒரு டோஸ் 30 முதல் 31 சதவீத நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. எனவே, ஒரு டோஸ் பெற்ற 30 கோடி மக்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muga Kannadi - chennai,இந்தியா
16-செப்-202122:41:06 IST Report Abuse
Muga Kannadi நோஸ்ட்ரடாமஸ் ஒன்னு சொல்லிருக்கான். அடுத்த வைரஸ் ரஷ்யா இருந்து வருமாம். ஜாக்கிரதை.
Rate this:
Cancel
PKN - Chennai,இந்தியா
16-செப்-202116:31:55 IST Report Abuse
PKN 72 கோடி பேர் என்பது தவறான தகவல்
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
16-செப்-202115:12:52 IST Report Abuse
J.Isaac அதாவது ஆறு மாதத்தில் அனைவரும் தடுப்பூசி போட்டுவிடுவார்கள். வியாபாரம் அமோகம்.
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
16-செப்-202122:28:01 IST Report Abuse
NicoleThomsonஅப்படி நினைக்கவில்லை நண்பரே , இன்று ஒரு குழந்தை பிறந்தால் பத்து வயது வரை தடுப்பூசிகள் போட்டு வருகிறோம் அவற்றின் விலையை கணக்கிட்டு பாருங்க 4860 ரூபாய் வரும் , குறை சொல்லும் நோக்கில் சொல்லவில்லை ஆனால் காயினுக்கு இருபக்கமும் உண்டு . நம்மிடம் இந்த நெகட்டிவ் சிந்தனையை தூண்டும் மீடியா ஆட்கள் பலர் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X