பொது செய்தி

இந்தியா

சென்செக்ஸ் 59 ஆயிரம் புள்ளிகளை தொட்டது

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மும்பை: மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் முதன்முறையாக 59 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சாதனை படைத்தது.இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் ஓரளவுக்கு கட்டுக்குள் உள்ளது. இதனால் பெரும்பாலான தொழில்கள் மீண்டும் மெல்ல மீண்டு வர தொடங்கி உள்ளன. நாட்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேலும் அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதாலும், முன்னணி நிறுவன
Sensex, Nifty, BSE, NSE, Indiansharemarket,

மும்பை: மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் முதன்முறையாக 59 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சாதனை படைத்தது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் ஓரளவுக்கு கட்டுக்குள் உள்ளது. இதனால் பெரும்பாலான தொழில்கள் மீண்டும் மெல்ல மீண்டு வர தொடங்கி உள்ளன. நாட்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேலும் அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதாலும், முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்துள்ளதாலும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.


latest tamil news



இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 114 புள்ளிகள் உயர்ந்து 58,838ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 42 புள்ளிகள் உயர்ந்து 17,562 ஆகவும் ஏற்றம் கண்ட நிலையில் இன்றைக்குள் சென்செக்ஸ் 59 ஆயிரம் புள்ளிகளை தொடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி நண்பகல் 12.15 மணியளவில் சென்செக்ஸ் 250 புள்ளிளுக்கு மேல் உயர்ந்து 59 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. அதன்பின் சற்று குறைந்து 59 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகமானது. 12.30 மணியளவில் சென்செக்ஸ் 248.27 புள்ளிகள் உயர்ந்து 58,971.47ஆகவும், நிப்டி 58.15 புள்ளிகள் உயர்ந்து 17,577.60ஆகவும் வர்த்தகமாகின.

இன்றைய வர்த்தகத்தில் ஐசிஐசிஐ, இன்போசிஸ், ஐடிசி, எஸ்பிஐ., கோட்டக் மஹிந்திரா, பொதுத்துறை நிறுவன பங்குகள், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட பங்குகளும் உயர்ந்து காணப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-செப்-202121:54:43 IST Report Abuse
அப்புசாமி பங்குச்சந்தை பிச்சிக்கிட்டுப் போனாலும் இருக்கிற பொதுச் சொத்தை வித்து சுட்டு அடமானம் வெச்சு சாப்புடற நிலமையில் ஒன்றிய அரசு. புரியுதா, நாடின் பணமெல்லாம் எங்கே ஒதுங்குதுன்னு.? ஜெய் கார்ப்பரேட்... ஜெய் அம்பானி... ஜெய் அதானி...
Rate this:
Cancel
16-செப்-202117:55:56 IST Report Abuse
Thamba, Pondicherry Extremely overvalued..
Rate this:
16-செப்-202119:18:01 IST Report Abuse
ஆரூர் ரங்இது 40000 புள்ளிகளில் இருந்தபோதே செல்லப்பட்ட 😇வார்த்தைதான். 70000 வந்தாலும் இதே பாட்டைப் பாடுவர்...
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
16-செப்-202113:08:51 IST Report Abuse
Duruvesan Thanks to the government
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X