பொது செய்தி

தமிழ்நாடு

புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்: அனைத்து துறை செயலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: ‛‛மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்,'' என அனைத்துத் துறை செயலர்களிடம் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து அனைத்துத் துறை செயலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் ஸ்டாலின் பேசியதாவது: மானியக் கோரிக்கையில்
TamilnaduCM, Stalin, Meeting, Secretary, New Schemes, தமிழகம், முதல்வர், ஸ்டாலின், துறை செயலாளர்கள், ஆலோசனை, புதிய திட்டங்கள்

சென்னை: ‛‛மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்,'' என அனைத்துத் துறை செயலர்களிடம் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து அனைத்துத் துறை செயலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் ஸ்டாலின் பேசியதாவது: மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். அறிவிப்புகளை செயல்படுத்தும்போது வழக்குகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு. சட்டசபையில் அமைச்சர்கள் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, துறை வாரியாக, மாதம் இரண்டு முறை நானே நேரடியாக ஆய்வு பணிகளை மேற்கொள்வேன் எனக் கூறியுள்னேன். அமைச்சர்களை மட்டுமல்ல ஒவ்வொரு துறை செயலாளர்களையும் நேரடியாக கண்காணிப்பேன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


latest tamil news


அரசின் புதிய திட்டங்கள், தகவல்கள் அனைத்தும் அரசின் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை என்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும். இணையதளத்தின் ஆன்லைன் தகவல் பலகை எனப்படும் டேஷ்போர்டில் தினந்தோறும் அதுகுறித்த தகவல்கள் புதுபிக்க வேண்டும். ஒவ்வொரு அறிவிப்பையும் செயல்படுத்த கால அளவை நிர்ணயித்து அதற்குள் செயல்படுத்துங்கள்.

திட்டங்களின் நிலையை வாரந்தோறும் ஆய்வு செய்வேன். அனைத்து துறையும் ஒருசேர முன்னேற்றம் கொள்ள வேண்டும். அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, திட்டங்கள் காலதாமதம் ஆகாமல் செயல்பட முடியும். எனவே, சம்பந்தப்பட்ட துறையின் செயலர்கள், வேறு துறை சார்ந்த பணிகளையும், மக்கள் பணிகள், அரசின் பணிகள் என எண்ணி செயல்பட வேண்டும்.

இதன் மூலம் திட்டங்கள் செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் மாற வேண்டும். அறிவித்த திட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களை சென்று சேர வேண்டும். ஒவ்வொரு துறையும் முன்னேற வேண்டும். திட்டங்கள் மூலம் அனைத்து மாவட்ட மக்கள் மற்றும் சமூக வளர்ச்சி ஏற்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


சமூக நீதியை கண்காணிக்க குழு

முன்னதாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்தில் சமூக நீதி அளவுகோலானது சட்டப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமிழக அரசால் கண்காணிப்புக் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளோம். கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக, முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை இக்குழு கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும். இதில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
16-செப்-202123:38:06 IST Report Abuse
Aarkay எதையும் அமைதியாய் செய்யுங்கள். இவ்வளவு விளம்பரங்களும், அறிவிப்புகளும் தேவையில்லை. மாற்றம், முன்னேற்றம் இருக்கும்பட்சத்தில், அவை தானாய் எங்களுக்கு தெரியவரும். அப்போது, நாங்களும் உங்கள்மீது நம்பிக்கை வைப்போம். மீடியாவில் பப்லிசிட்டி தேவையில்லை.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
16-செப்-202119:57:15 IST Report Abuse
Vena Suna என்ன திட்டமோ எழவோ என்ன ஆட்டையை போடப் போறானுகளோ
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
16-செப்-202119:57:14 IST Report Abuse
sankaseshan சீக்கிரமாக செயல் படுத்தி நாத்தான் எங்களுக்கு சேரவேண்டிய கமிஸ்ஸின் விரைவாக வரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X