அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட் தேர்வு எழுதியோருக்கு கவுன்சிலிங் தர வேண்டும்'

Added : செப் 16, 2021
Share
Advertisement
சென்னை : 'நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு மனநல கவுன்சிலிங் வழங்கவும், அவர்களின் பெற்றோருக்கு தக்க அறிவுரைகள் வழங்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர் அனைவரும், தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டிய சூழ்நிலை, தற்போது தமிழகத்தில்

சென்னை : 'நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு மனநல கவுன்சிலிங் வழங்கவும், அவர்களின் பெற்றோருக்கு தக்க அறிவுரைகள் வழங்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர் அனைவரும், தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டிய சூழ்நிலை, தற்போது தமிழகத்தில் ஏற்பட்டிருப்பது வேதனை அளிக்கும் செயல்.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வெற்று வாக்குறுதியை நம்பிய, மாணவ, மாணவியர், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதால், நீட் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி, இதுபோன்ற விபரீதி நடவடிக்கைகளை எடுக்கும் சூழ்நிலை, தமிழகத்தில் உருவாகி உள்ளது.

உயர் கல்வியில் ஏராளமான படிப்புகள் இருக்கும் சூழ்நிலையில், மருத்துவப் படிப்புதான் வாழ்க்கை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து, உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சிகளில், மாணவ, மாணவியர் ஈடுபட வேண்டாம்.நீட் தேர்வு முடிவுகள் வெளி வருவதற்கு முன்பே, இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதை கருத்தில் வைத்து, முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு கவுன்சிலிங் வழங்கவும், அவர்களின் பெற்றோருக்கு தக்க அறிவுரைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X