பொது செய்தி

இந்தியா

பாலியல் வழக்குகளில் முதலிடத்தில் ராஜஸ்தான்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛கடந்த 2020ம் ஆண்டு பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 5,310 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது,'' என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்து உள்ளதாவது: நாட்டில் கடந்த 2020ல் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 5,310 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. உத்திரபிரதேசம் 2,769
Rape Cases, Rajasthan Tops, Jaipur, 2nd, Metro Cities, பாலியல் வன்கொடுமை, வழக்கு, ராஜஸ்தான், முதலிடம்

புதுடில்லி: ‛‛கடந்த 2020ம் ஆண்டு பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 5,310 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது,'' என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்து உள்ளதாவது: நாட்டில் கடந்த 2020ல் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 5,310 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. உத்திரபிரதேசம் 2,769 வழக்குகளுடன் 2ம் இடத்திலும், மத்திய பிரதேசம் 2,339 வழக்குகளுடன் 3ம் இடத்திலும் உள்ளன. மஹாராஷ்டிரா 2,061 வழக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

பாலியல் வழக்குகளில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருந்தாலும் அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 16 சதவீதம் குறைந்துள்ளன. கடந்த 2020ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் 34,535 வழக்குகளுடன் 3ம் இடத்தில் உள்ளது. 49,385 வழக்குகளுடன் உத்தரபிரதேசம் முதலிடத்திலும் 36,439 வழக்குகளுடன் மேற்கு வங்கம் 2ம் இடத்திலும் உள்ளன.


latest tamil news


கடந்த 2020ல் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் 1,279 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 4,031 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குடும்ப நண்பர்கள், அண்டை வீடுகளில் வசிப்பவர்கள், உடன் பணியாற்றுவோர் மற்றும் பிற அறிமுகமான நபர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல், ராஜஸ்தானில் எஸ்.சி.,களுக்கு எதிரான குற்றங்கள் 3 ஆண்டாக அதிகரித்துள்ளன. கடந்த 2018ல் இந்த குற்றங்கள் எண்ணிக்கை 4,607 ஆக இருந்தது. இது, 2019ல் 6,794 ஆகவும் 2020ல் 7,071 ஆகவும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-202108:01:02 IST Report Abuse
Prasanna Krishnan All vadakans are ...
Rate this:
Cancel
ganesha - tamilnadu,இந்தியா
17-செப்-202107:12:50 IST Report Abuse
ganesha இதே பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலத்தின் பெயராக இருக்கட்டும் உடனே உ பி ஸ் வரிசையா நின்னுண்டு தினமலர் சர்வர் முடங்கும் அளவுக்கு வாந்தி எடுப்பார்கள்.
Rate this:
Cancel
Krishnan - Coimbatore ,இந்தியா
17-செப்-202104:26:39 IST Report Abuse
Krishnan இவ்வளவு துல்லியமான கணக்கு கொடுக்கும் உங்களுக்கு, ஏன் அத கண்ட்ரோல் பண்ண முடியல. முதலிடம் ராஜஸ்தானா ஆன 16 சதவீதம் குறைஞ்சிருக்காம். எத்தனைபேருக்கு தண்டனை கொடுத்திருப்பீங்க. இவன் தான் கற்பழிச்சிருக்கானு தெரிஞ்சாலும் கூட 10/20 வருசம் கேசு ஓடுது. ஏன்னா பணம். ஒண்ணுக்கு ஆகாத சட்டங்கள். உருப்படாது நாடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X