பாலியல் வழக்குகளில் முதலிடத்தில் ராஜஸ்தான்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாலியல் வழக்குகளில் முதலிடத்தில் ராஜஸ்தான்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (23)
Share
புதுடில்லி: ‛‛கடந்த 2020ம் ஆண்டு பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 5,310 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது,'' என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்து உள்ளதாவது: நாட்டில் கடந்த 2020ல் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 5,310 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. உத்திரபிரதேசம் 2,769
Rape Cases, Rajasthan Tops, Jaipur, 2nd, Metro Cities, பாலியல் வன்கொடுமை, வழக்கு, ராஜஸ்தான், முதலிடம்

புதுடில்லி: ‛‛கடந்த 2020ம் ஆண்டு பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 5,310 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது,'' என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்து உள்ளதாவது: நாட்டில் கடந்த 2020ல் பதிவான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 5,310 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. உத்திரபிரதேசம் 2,769 வழக்குகளுடன் 2ம் இடத்திலும், மத்திய பிரதேசம் 2,339 வழக்குகளுடன் 3ம் இடத்திலும் உள்ளன. மஹாராஷ்டிரா 2,061 வழக்குகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.

பாலியல் வழக்குகளில் ராஜஸ்தான் முதலிடத்தில் இருந்தாலும் அம்மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 16 சதவீதம் குறைந்துள்ளன. கடந்த 2020ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் 34,535 வழக்குகளுடன் 3ம் இடத்தில் உள்ளது. 49,385 வழக்குகளுடன் உத்தரபிரதேசம் முதலிடத்திலும் 36,439 வழக்குகளுடன் மேற்கு வங்கம் 2ம் இடத்திலும் உள்ளன.


latest tamil news


கடந்த 2020ல் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் 1,279 பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 4,031 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குடும்ப நண்பர்கள், அண்டை வீடுகளில் வசிப்பவர்கள், உடன் பணியாற்றுவோர் மற்றும் பிற அறிமுகமான நபர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல், ராஜஸ்தானில் எஸ்.சி.,களுக்கு எதிரான குற்றங்கள் 3 ஆண்டாக அதிகரித்துள்ளன. கடந்த 2018ல் இந்த குற்றங்கள் எண்ணிக்கை 4,607 ஆக இருந்தது. இது, 2019ல் 6,794 ஆகவும் 2020ல் 7,071 ஆகவும் உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X