டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021
Share
சென்னை: ‛‛டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது: இன்று (செப்.,16) மற்றும் நாளை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில்
TAMILNADU, RAIN FALL, DELTA DISTRICTS, RAIN, தமிழகம், டெல்டா, மாவட்டங்கள், மழை, வானிலை ஆய்வு மையம், தகவல்

சென்னை: ‛‛டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:
இன்று (செப்.,16) மற்றும் நாளை: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

செப்.,18ம் தேதி: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழையும், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news


செப்., 19ம் தேதி: வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

செப்., 20ம் தேதி: கடலோர மாவட்டங்கள் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசனது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு சென்டிமீட்டரில்:


கீழ்பெண்ணாத்துார் (திருவண்ணாமலை) 10 செ.மீ., கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), மணலுார்பேட்டை (கள்ளக்குறிச்சி) தலா 8 செமீ., தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி) தலா 7 செ.மீ., கடவனுார் (கள்ளக்குறிச்சி) 6 செ.மீ., ஆலங்குடி (புதுக்கோட்டை), கொடைக்கானல், மதுரை விமான நிலையம், மணம்பூண்டி (விழுப்புரம்) தலா 5 செ.மீ.,


மீனவர்களுக்கான எச்சரிக்கை:



அரபிக்கடல் பகுதிகள்:


இன்று 16ம் தேதி: தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X