பொது செய்தி

தமிழ்நாடு

திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரத்தில் 3 வேளை அன்னதான திட்டம் துவக்கம்

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
சென்னை: திருச்செந்தூர், திருத்தணியில் உள்ள முருகன் கோயில்கள், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில்களில், மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்
திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரத்தில் 3 வேளை அன்னதான திட்டம் துவக்கம்

சென்னை: திருச்செந்தூர், திருத்தணியில் உள்ள முருகன் கோயில்கள், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில்களில், மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதல்வருடன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இத்திட்டத்தில் தற்போது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் ஆகிய இரண்டு கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


latest tamil news


இத்திட்டமானது விரிவுப்படுத்தப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய மூன்று கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல்வர் ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்ட அன்னதானத் திட்டத்தின் வாயிலாக இம்மூன்று கோயில்களிலும் நாள்தோறும் சுமார் 7,500 பக்தர்கள் பயனடைவார்கள். இந்த அன்னதானத் திட்டத்தின்கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை உணவு பரிமாறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
17-செப்-202109:24:53 IST Report Abuse
duruvasar அறிவாலயம், அன்பகம், பெரியார் திடல், கருணா திடல், உதயம் திடல் இங்கெல்லாமும் இந்த திட்டத்தை விரிவு படுத்துங்கள். உடன்பிறப்புக்ஙள் அங்கேயே காலடியில் படுத்துகிடப்பார்கள். தட்டு வைக்கும் சத்தம் கேட்டால் முழித்துக் கொள்வார்கள். நன்றியோடு இருப்பார்கள்.
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
17-செப்-202120:33:08 IST Report Abuse
தமிழ்வேள்தட்டெல்லாம் வேண்டாம் ...ஏதாவது ஒரு ஓரமாக கல்லில் சோற்றைப்போட்டு -ச்சூ ச்சூ பா.....பா ..பூச்சி பூச்சி என்று குரல்விட்டால் போதும் உடன்பிறப்பும் உளுத்தம்பருப்பும் போட்டி போட்டு ஓடிவந்து இல்லாத வாலைக்குழைத்து நிற்காதா என்ன ? கட்டுமர வளர்ப்பு இதிலெல்லாம் சோடை போக வாய்ப்பே இல்லை...
Rate this:
Cancel
17-செப்-202108:34:08 IST Report Abuse
அப்புசாமி சபாஷ்... தமிழகத்தில் இப்படித்தான் சொரணையற்ற சோற்றாலடித்த பிண்டங்களை தயார் செய்யணும்.
Rate this:
Cancel
Vel - Singapore,சிங்கப்பூர்
17-செப்-202106:41:14 IST Report Abuse
Vel மிகவும் நல்ல திட்டம், ஒழுங்காக நடைமுறை படுத்தினால் மக்கள் போற்றுவார்கள். வாழ்த்துக்கள்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
18-செப்-202106:54:03 IST Report Abuse
 Muruga Velசாப்பிடறவன பாத்தா பஞ்சத்தில் அடிபட்டவன் மாதிரியா இருக்காங்க .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X