ஐதராபாத்தில் சிறுமியை வன்கொடுமை செய்தவர் பிணமாக மீட்பு

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
ஐதராபாத்: ஐதராபாத்தில் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர், தண்டவாளத்திலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.கடந்த 9ம் தேதி, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆறு வயதான சிறுமியை, பல்லகொண்டா ராஜு என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தெரிகிறது. இவரை பிடிக்க ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், அவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு
HIDRABATH, CHILD, RAPE, ACCUST, BODY, RAILWAY TRACK, ஐதராபாத், சிறுமி, வன்கொடுமை, குற்றவாளி, பிணம், மீட்பு

ஐதராபாத்: ஐதராபாத்தில் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர், தண்டவாளத்திலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 9ம் தேதி, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆறு வயதான சிறுமியை, பல்லகொண்டா ராஜு என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தெரிகிறது. இவரை பிடிக்க ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், அவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என போலீசார் அறிவித்திருந்தனர். மேலும், தெலங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி, பல்லகொண்டா ராஜு என்கவுன்டர் செய்யப்படுவார் என்று அறிவித்திருந்தார்.


latest tamil news


இந்நிலையில், தெலுங்கானாவில், கான்பூர் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில், பல்லகொண்டா ராஜு சடலமாகக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடலைக் கைப்பற்றிய போலீசார், உடலில் உள்ள டாட்டூ மற்றும் அடையாளங்கள் ஒத்துப்போவதால் அதைவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murphys law -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-202104:36:13 IST Report Abuse
murphys law 🙏
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
16-செப்-202121:05:21 IST Report Abuse
Ram இப்படித்தான் உடனடியாக போட்டுத்தள்ளவேண்டும் , அப்போதான் இநிமேல் குற்றம் செய்ய பயப்படுவார்கள் ... ஆனால் குற்றம் புரிந்ததற்கான ஆதாரத்தை பொதுவெளியில் வைக்கவேண்டும்
Rate this:
Cancel
16-செப்-202120:39:07 IST Report Abuse
தமிழ் குடிமகன் என்கவுன்டர் செய்ய அமைச்சருக்கு யார் அதிகாரம் கொடுத்தது !!! ஏன் குற்றவாளிகளை பிடித்து தண்டனை கொடுக்க முடியவில்லை.. என்கவுண்டர் என்றால் தன்னை காப்பாற்றிக்கொள்ள காவலர்கள் செய்வது. அது தண்டனை முறை அல்ல. சட்டம் மற்றும் நீதிமன்றத்தால் யாருக்கும் தண்டனை தரமுடியாது என்றால் அவை எதற்கு ???
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
17-செப்-202104:09:43 IST Report Abuse
Sanny உனது மகளுக்கு அந்த கொடுமை நடந்து இருந்தால் நீ இதே கருத்தை சொல்லுவியா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X