ஐதராபாத்தில் சிறுமியை வன்கொடுமை செய்தவர் பிணமாக மீட்பு| Dinamalar

ஐதராபாத்தில் சிறுமியை வன்கொடுமை செய்தவர் பிணமாக மீட்பு

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (12)
Share
ஐதராபாத்: ஐதராபாத்தில் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர், தண்டவாளத்திலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.கடந்த 9ம் தேதி, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆறு வயதான சிறுமியை, பல்லகொண்டா ராஜு என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தெரிகிறது. இவரை பிடிக்க ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், அவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு
HIDRABATH, CHILD, RAPE, ACCUST, BODY, RAILWAY TRACK, ஐதராபாத், சிறுமி, வன்கொடுமை, குற்றவாளி, பிணம், மீட்பு

ஐதராபாத்: ஐதராபாத்தில் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர், தண்டவாளத்திலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த 9ம் தேதி, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆறு வயதான சிறுமியை, பல்லகொண்டா ராஜு என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தெரிகிறது. இவரை பிடிக்க ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், அவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என போலீசார் அறிவித்திருந்தனர். மேலும், தெலங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி, பல்லகொண்டா ராஜு என்கவுன்டர் செய்யப்படுவார் என்று அறிவித்திருந்தார்.


latest tamil news


இந்நிலையில், தெலுங்கானாவில், கான்பூர் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில், பல்லகொண்டா ராஜு சடலமாகக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடலைக் கைப்பற்றிய போலீசார், உடலில் உள்ள டாட்டூ மற்றும் அடையாளங்கள் ஒத்துப்போவதால் அதைவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X