சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

'கறும் புலி' புதிருக்கு விடை கிடைத்தது!

Added : செப் 16, 2021
Share
Advertisement
ஒடிசாவிலுள்ள சிமிலிபால் வனப் பகுதியில், கறுப்பு நிறப் புலிகள் நடமாடுகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக, அப்பகுதி ஆதிவாசிகள் கண்டு, வனத் துறையினரிடம் தெரிவித்து வந்தனர். அது அரிய வகைப் புலியாக இருக்கலாம் என பலர் கருதினாலும், விலங்கியல் வல்லுனர்கள் அப்படிக் கருதவில்லை.ஆனால், அண்மையில் தேசிய உயிரி அறிவியல் மையத்தின் விஞ்ஞானிகள் 'கறும்புலி' புதிருக்கு விடை கண்டறிந்துள்ளனர்.
 'கறும் புலி' புதிருக்கு விடை கிடைத்தது!

ஒடிசாவிலுள்ள சிமிலிபால் வனப் பகுதியில், கறுப்பு நிறப் புலிகள் நடமாடுகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக, அப்பகுதி ஆதிவாசிகள் கண்டு, வனத் துறையினரிடம் தெரிவித்து வந்தனர். அது அரிய வகைப் புலியாக இருக்கலாம் என பலர் கருதினாலும், விலங்கியல் வல்லுனர்கள் அப்படிக் கருதவில்லை.

ஆனால், அண்மையில் தேசிய உயிரி அறிவியல் மையத்தின் விஞ்ஞானிகள் 'கறும்புலி' புதிருக்கு விடை கண்டறிந்துள்ளனர். ஒடிசா வனப் பகுதியிலுள்ள புலிகள், இள மஞ்சள் தோலில், கறுப்பு, வெள்ளை என்ற கலவையான வரிகளைக் கொண்ட 'பெங்கால் டைகர்' இனத்தைச் சேர்ந்தவை.

ஆனால், வெகு சில புலிகள் மட்டும், கறுப்பு வரிகள் மிக அகலமான பட்டைகளுடன் பிறந்துள்ளன. சில புலிகளுக்கு இந்தக் கறுப்புப் பட்டை, அருகே உள்ள பட்டையுடன் சேர்ந்தே உள்ளன.இதனால் தொலைவிலிருந்து பார்க்க, இவை கறுப்பு நிறப் புலி போலவே தோற்றம் அளிக்கின்றன.சிமிலிபால் வனப் பகுதியில் 2017 மற்றும் 2018ம் ஆண்டுகளில், கடைசியாக எட்டு 'கறுப்புப் புலிகளை' கண்டதாக வனத்துறை பதிவு செய்துள்ளது. இதன் பின்னால் உள்ள காரணத்தை, சூழலியலாளர் டாக்டர் உமா ராமகிருஷ்ணன் தலைமையிலான வல்லுனர்கள் ஆராய்ந்தனர்.

சிமிலிபால் பகுதியில் புலிகளின் எண்ணிக்கை குறைவு. இதனால், அங்கே உட்கலப்பு மூலம் இனம்பெருக்கம் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை.புலிகளின் தோல் நிறமிகளை தீர்மானிக்கும் மரபணுக்களில் ஒன்று, 'டேக்பெப்!' உட்கலப்பில் பிறக்கும் புலிகளில், டேக்பெப் அணுக்கள் வளர்சிதை மாற்றமடைந்து, அகலமான கறுப்புப் பட்டைகள் தோன்றியுள்ளது என உமாவின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.

அதுமட்டுமல்ல, புவனேஸ்வரிலுள்ள நந்தன்கானன் உயிரியல் பூங்கா, ராஞ்சியிலுள்ள பகவான் பிர்சா உயிரியல் பூங்கா மற்றும் சென்னையிலுள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஆகியவற்றிலும் அகலமான கறுப்பு நிறப் பட்டையுள்ள புலிகள் உள்ளன என, உமா குழுவினரின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X