பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் செல்கிறார் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பகவத் 3 நாள் பயணமாக அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வரும் அக்., 1 முதல் 3ம் தேதி வரை 3 நாட்கள் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ்., மோகன் பகவத் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடைசியாக
RSS, LEADER, MOHAN BAGAVATH, JAMMU, TRAVEL, ஆர்எஸ்எஸ் தலைவர், மோகன்பகவத், காஷ்மீர், பயணம்

புதுடில்லி: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பகவத் 3 நாள் பயணமாக அக்டோபர் மாதம் ஜம்மு காஷ்மீருக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் அக்., 1 முதல் 3ம் தேதி வரை 3 நாட்கள் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ்., மோகன் பகவத் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாமல் இருந்தபோது ஜம்மு காஷ்மீருக்கு மோகன் பகவத் சென்றிருந்தார். அதன்பின இப்போது செல்லும் மோகன் பாகவத், ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், கல்வியாளர்கள் பங்கேற்கும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.


latest tamil news


கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் இருந்ததால் மோகன் பகவத் ஜம்மு காஷ்மீருக்குச் செல்லவில்லை. மற்றவகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழக்கமாகச்செல்லும் பயணம்தான் என்று ஆர்.எஸ்.எஸ்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மோகன் பகவத் பயணம் குறித்து ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது: 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர் காஷ்மீர் செல்வது இயல்பானது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எந்த இடத்துக்கும் நேரடியாகச் செல்லவில்லை, நிர்வாகிகளையும் சந்திக்கவில்லை.

இப்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால், ஜம்மு காஷ்மீருக்கு நேரடியாக மோகன் பகவத் சென்று நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் ஜம்மு காஷ்மீரின் நிலை, முன்னேற்றச் சூழல் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
17-செப்-202110:43:40 IST Report Abuse
Kumar மூர்க்கர்கள் மட்டும் தான் அங்கே இருக்க வேண்டுமா? 15 ஆம் நூற்றாண்டு வரை அங்கு ஒரு மூர்க்கர் கூட இல்லை.ஆனால் ஆறே நூற்றாண்டுகளில் அங்கு உள்ள அனைவரையும் அழித்து மூர்க்கர் கூட்டம் ஆக்கிரமிப்பு செய்து விட்டது.அரை நூற்றாண்டில் தமிழகத்தை திராவிட கொடுக்குகள் ஆக்கிரமித்தது போல. வாழ்க வையகம்.வாழ்க வளமுடன்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-செப்-202109:01:48 IST Report Abuse
Pugazh V Duruvesan - Dharmapuri,இந்தியா :: இது உங்கள் சொந்த பேரா? ஏன்யா இப்படி முட்டாள் தனமாக நடந்து கொள்கிறார்கள்?
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
16-செப்-202121:49:24 IST Report Abuse
தஞ்சை மன்னர் அட பாவதே காஷ்மீர் நல்லாத்தானே இருக்கு இந்த குழப்பவாதி போனோமா வந்தோமா என்று இல்லமால் கோமாதா பாரதமாதா என்று ஏதாவது உளறிவிட்டு வந்து சேருமே, அது சரி இந்த அமைப்புக்கு இந்திய ஒன்றிய அரசு செயப்பாடுகளை பற்றி பேசவும் ஆய்வு செய்யவும் யார் அதிகாரம் கொடுத்தது இவர்களின் வேலை பசு கோமியம் , சாணம் கொடுத்தத அதில் என்ன என்ன இருக்கு என்று ஆய்வு செய்யவே நேரம் இருக்குமே இவர்கள் என்ன செய்ய போகிறாரகள் angu சென்று ஒருவேளை அங்கே பசு மாடு மேய நல்ல மேய்ச்சல் நிலம் அமைக்க நிலம் தேட போகவேண்டும இல்ல ஒரு வேலை கைபர் கணவாய் திறந்தே இருக்கே நம்ம கூட்டம் எல்லாம் நல்லபடியக ஓடி ஒழிய முடியமா என்று பார்க்க போகுவரோ
Rate this:
raja - madurai,இந்தியா
17-செப்-202109:29:07 IST Report Abuse
rajaஆக்சுவலி ஐ லைக் இட்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X