இந்திய ரயில்வே பாலங்களை தகர்க்கத் திட்டமிட்ட பாக்., பயங்கரவாதிகள் கைது

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய ரயில்வே பாலங்களை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் டில்லியில் கைது செய்யப்பட்டனர். ஆர்டிஎக்ஸ் எனப்படும் துகள் வடிவில் உள்ள வெடிபொருள் மிகவும் ஆபத்தானவை. இது சர்வதேச அளவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரால் அதிகமாக வாங்கப்படுகிறது.வீடுகள், முக்கிய ரயில்வே பாலங்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் குண்டுவெடிப்பை நடத்த இந்த
இந்திய ரயில்வே பாலங்களை தகர்க்கத் திட்டமிட்ட பாக்., பயங்கரவாதிகள் கைது

புதுடில்லி: இந்திய ரயில்வே பாலங்களை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் டில்லியில் கைது செய்யப்பட்டனர்.

ஆர்டிஎக்ஸ் எனப்படும் துகள் வடிவில் உள்ள வெடிபொருள் மிகவும் ஆபத்தானவை. இது சர்வதேச அளவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோரால் அதிகமாக வாங்கப்படுகிறது.

வீடுகள், முக்கிய ரயில்வே பாலங்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் குண்டுவெடிப்பை நடத்த இந்த ஆர்டிஎக்ஸை தீவிரவாதிகள் பயன்படுத்துவது வழக்கம். சர்வதேச அளவில் ஆர்டிஎக்ஸ் கடத்துவது விற்பது,வாங்குவது உள்ளிட்டவை மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது. ஒருவரிடமிருந்து இந்த வெடிப்பொருள் கைப்பற்றப்பட்டால் உலக நாடுகள் பல அதிகபட்ச தண்டனை வழங்கி வருகின்றன.

இந்நிலையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பெங்காலி மொழி பேசக்கூடிய 15 பயங்கரவாத அமைப்பினரை உருவாக்கியுள்ளது. 1993ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்போல மீண்டும் இந்தியாவில் குண்டு வெடிப்பை ஏற்படுத்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் தயார் செய்து வருகிறது.


latest tamil news



இதனை அடுத்து சமீபத்தில் இந்திய தலைநகர் டில்லியில் 2 பயங்கரவாதிகள் பிடிபட்டனர். சீசேம், ஒசாமா ஆகிய பாகிஸ்தானைச் சேர்ந்த இரு பயங்கரவாதிகளிடம் இருந்து 1.5 கிலோ ஆர்டிஎக்ஸ் கைப்பற்றப்பட்டது. இவர்களிடம் இந்திய உளவுத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இந்திய ரயில்வே பாலங்களை தகர்க்க திட்டமிட்டது தெரியவந்தது.

மேலும் இந்தியாவின் பல மாநிலங்களில் பதுங்கியிருக்கும் ஸ்லீப்பர் செல்கள் இவர்களுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது. ஓமன் நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு இந்த பயங்கரவாதிகள் கடல் மார்க்கமாக மோட்டார் பொருத்தப்பட்ட கப்பல்களில் சென்று ஆயுதப் பயிற்சி பெறுகின்றனர்.

தலைநகர் டில்லி உட்பட இந்தியாவின் பல முக்கிய பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்புகள் நடத்த பாகிஸ்தான் தங்கள் பயங்கரவாதிகள் மூலமாகத் திட்டமிட்டு இருப்பது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
20-செப்-202113:06:33 IST Report Abuse
jayvee இவர்களையும் போராளிகன் என்று அழைப்பார் அமீர் .. சீமானின் அடியாள்
Rate this:
Cancel
JAGADEESANRAJAMANI - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
19-செப்-202109:46:25 IST Report Abuse
JAGADEESANRAJAMANI இந்திய தண்டனை சட்டம் கடுமையாக்கப்படவேண்டும்.சிறையில் இட்டு பிரியாணி கொடுக்க கூடாது.விபரங்களை அறிந்துகொண்டு கொன்றுவிடவேண்டும்.
Rate this:
Cancel
Rajagopal - Chennai,இந்தியா
17-செப்-202114:03:37 IST Report Abuse
Rajagopal ஒரு அணு குண்டு போட்டு பன்றிஸ்தானை ஒழித்தால்தான் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X