பொது செய்தி

இந்தியா

கடந்த 6 நிதியாண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி வாராக்கடன் வசூல்: நிர்மலா சீதாராமன்

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த 6 நிதியாண்டுகளில் வங்கிகள் ரூ.5,01,479 கோடி வாராக்கடனை வசூல் செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.டில்லியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: வாராக்கடன் பிரச்னையை தீர்க்க தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் வழங்கும் பத்திர ரசீதுகளுக்கு மத்திய அரசு 30,600 கோடி ரூபாய் உத்தரவாதம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி
BJP,Nirmala,Nirmala Sitharaman,நிர்மலா,நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: கடந்த 6 நிதியாண்டுகளில் வங்கிகள் ரூ.5,01,479 கோடி வாராக்கடனை வசூல் செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

டில்லியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: வாராக்கடன் பிரச்னையை தீர்க்க தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் வழங்கும் பத்திர ரசீதுகளுக்கு மத்திய அரசு 30,600 கோடி ரூபாய் உத்தரவாதம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

கடந்த 6 நிதியாண்டுகளாக மத்திய அரசு, அங்கீகாரம், தீர்மானம், மறு மூலதனம் மற்றும் சீர்திருத்தங்கள் ஆகிய கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனால் வங்கிகள் ரூ.5,01,479 கோடி வாராக்கடன் வசூல் செய்தன. அதில் கடந்த 2018 மார்ச் முதல் 3.1 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2018 ம் ஆண்டில் 21 பொதுத்துறை வங்கிகளில் 2 வங்கிகள் மட்டுமே லாபத்தில் இயங்கின. தற்போது 2 வங்கிகள் மட்டுமே நஷ்டத்தை சந்தித்து உள்ளன.பொதுத்துறை வங்கிகள், கடன் மற்றும் ஈவுத்தொகை மூலம் ரூ.58,697 கோடியை திரட்டி உள்ளன.


latest tamil news


தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்துடன் இணைந்து, இந்திய கடன் தீர்மான நிறுவன கழகத்தையும் அமைக்க உள்ளோம். இதன் 49 சதவீத பங்குகள் பொதுத்துறை வங்கிகளிடம் இருக்கும். எஞ்சியவை தனியார் நிறுவனங்களிடம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vns - Delhi,யூ.எஸ்.ஏ
16-செப்-202123:07:14 IST Report Abuse
vns மோடியால் முடியாதது ஏதும் இல்லை. Modi hai tho mumkin hai.
Rate this:
Cancel
16-செப்-202121:44:47 IST Report Abuse
அப்புசாமி கடந்த 6 வருஷத்தில் ஆட்சி செய்த காங்குரஸ்காரர்கள் எக்கச்சக்க கடனைக் குடுத்து நாட்டை குட்டிச் சுவராக்கிட்டாங்க. எல்லாம் அந்த நேருதான் காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X