சென்னை: முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டின் வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 275 யூனிட் மணல் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
![]()
|
கடந்த அதிமுக ஆட்சியின் போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இன்று (செப்.,16) இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும் அவரது நிறுவனங்களின் பங்குதாரர்கள், உறவினர்கள் நேர் முக உதவியாளர்கள் வீடுகள் சென்னையில் மட்டும் நான்கு இடங்களிலும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் அவருக்கு சொந்தமாக உள்ள, திருமண மண்டபம், வீடு, நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றது. பெங்களூரிலும் இவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது.
சோதனையின் போது 7.2 கிலோ வெள்ளி பொருட்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குகள், 34லட்சம் ரூபாய் ரொக்கப்பபணம், ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், 623 கிராம் தங்க நகைகள் மற்றும் 47 கிராம் வைர நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
![]()
|
மேலும் ரோல்ஸ்ராய்ஸ் உள்ளிட்ட ஒன்பது சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து வீரமணியின் வீட்டின் வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள 275 யூனிட் மணல் பதுக்கி வைத்து இருந்ததையும் லஞ்சஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement