சிவகுமாருடன் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஆலோசனை

Added : செப் 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோலார்:மைசூரு சாமுண்டேஸ்வரி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடாவை தொடர்ந்து, அக்கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ., காங்கிரஸ் கதவை தட்டுகிறார். இது ம.ஜ.த., மேலிடத்துக்கு அதிர்ச்சியளித்துள்ளது.அடுத்த சட்டசபை தேர்தலில், 120 தொகுதிகளை கைப்பற்றி, கர்நாடகாவில் ஆட்சியில் அமர வேண்டுமென, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி கனவு காண்கின்றனர்.இதற்காக தொடர் கூட்டம்

கோலார்:மைசூரு சாமுண்டேஸ்வரி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடாவை தொடர்ந்து, அக்கட்சியின் மற்றொரு எம்.எல்.ஏ., காங்கிரஸ் கதவை தட்டுகிறார். இது ம.ஜ.த., மேலிடத்துக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

அடுத்த சட்டசபை தேர்தலில், 120 தொகுதிகளை கைப்பற்றி, கர்நாடகாவில் ஆட்சியில் அமர வேண்டுமென, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி கனவு காண்கின்றனர்.இதற்காக தொடர் கூட்டம் நடத்தி, தொண்டர்களை உற்சாகப்படுத்துகின்றனர். பெங்களூரு சேஷாத்திரிபுரம் ம.ஜ.த., அலுவலகம், நாள் முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

ராம்நகர் பிடதி அருகிலுள்ள குமாரசாமியின் பண்ணை வீடும் கூட அரசியல் மையமாக மாறியுள்ளது. இங்கும் கூட தலைவர்கள், தொண்டர்களுடன் குமாரசாமி ஆலோசனை நடத்துகிறார். சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பின் மாநில சுற்றுப்பயணம் செய்யவும், குமாரசாமி முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையில் ஒவ்வொரு தலைவர்களாக, ம.ஜ.த.,வை விட்டு செல்வது, அக்கட்சி மேலிடத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.மைசூரின் சாமுண்டீஸ்வரி எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடாவை தொடர்ந்து, கோலாரின் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சீனிவாச கவுடாவும் காங்கிரசுக்கு தாவ தயாராகிறார். கே.சி., வேலி தண்ணீரை கழிவு தண்ணீர் என குமாரசாமி விமர்சித்திருந்தார்.

இதற்கு பகிரங்கமாக அதிருப்தி தெரிவித்த சீனிவாச கவுடா, 'கோலார் மாவட்டத்துக்கு, கே.சி., வேலி தண்ணீர் கொண்டு வந்ததன் மூலம், ரமேஷ்குமார் மக்கள் மறக்க முடியாத வேலையை செய்துள்ளார். ஆனால் குமாரசாமி இந்த தண்ணீரை கழிவு நீர் என, விமர்சித்தது சரியல்ல. இத்தண்ணீர், கோலாருக்கு மிகவும் முக்கியம். நானும் கூட அந்த தண்ணீரை குடித்துள்ளேன். நான் செத்துவிட்டேனா' என கேள்வியெழுப்பியிருந்தார்.

ம.ஜ.த., தலைவருக்கு எதிராக பேசியதால், சீனிவாச கவுடா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக தேவகவுடா கூறியிருந்தார். இந்நிலையில் மாநில காங்., தலைவர் சிவகுமாரை, அவரது இல்லத்தில் சீனிவாச கவுடா நேற்று முன் தினம் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். காங்கிரசில் சேருவது குறித்து விவாதித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
17-செப்-202105:56:28 IST Report Abuse
 Muruga Vel கட்சிக்கு புதிய தலைவர் தேவை ..சீனியர் தேவகவுடா விலகி குட்டி ராதிகாவை நியமிக்க வேண்டும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X