பொது செய்தி

இந்தியா

சிறந்த சாலை தேவையென்றால் கட்டணம் செலுத்த வேண்டும்: அமைச்சர் கட்கரி

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (83)
Share
Advertisement
புது டில்லி: டில்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலை பணிகளை இன்று (செப்., 16) ஆய்வு செய்த மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் சிறந்த சாலை கட்டமைப்பு தேவையென்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்தத் தான் வேண்டும் என்றார். பெட்ரோல், டீசல் விலை பல மாதங்களாக லிட்டர் நூறு ரூபாய் என்ற அளவிலேயே இருக்கிறது. இது தவிர சுங்கக் கட்டணங்களும் கணிசமாக

புது டில்லி: டில்லி - மும்பை எக்ஸ்பிரஸ் சாலை பணிகளை இன்று (செப்., 16) ஆய்வு செய்த மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் சிறந்த சாலை கட்டமைப்பு தேவையென்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்தத் தான் வேண்டும் என்றார்.



latest tamil news



பெட்ரோல், டீசல் விலை பல மாதங்களாக லிட்டர் நூறு ரூபாய் என்ற அளவிலேயே இருக்கிறது. இது தவிர சுங்கக் கட்டணங்களும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள், பொது மக்கள், வாகன ஓட்டிகள் என பலரும் சமீபகாலமாக நீண்ட காலமாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் என கோரிக்கையை அதிகம் முன் வைக்கின்றனர்.

கடந்த மாதம் சென்னை ராஜிவ் காந்தி சாலையில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை மாநில அரசு நிறுத்தியது. இதனால் அச்சாலையை பயன்படுத்தும் மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதே போல் மத்திய அரசு கட்டுப்பாட்டில் வரும் சென்னசமுத்திரம், நெமிலி, வானகரம், சூரப்பட்டு, பரனூர் சுங்கச்சாவடிகளை அகற்றவும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சுங்கக் கட்டணம் குறித்து கூறியதாவது: நீங்கள் ஏ.சி., மண்டபத்தைப் பயன்படுத்த விரும்பினால், அதற்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டும். இல்லையெனில், நீங்கள் வெளியிலும் திருமணத்தை ஏற்பாடு செய்யலாம்.


latest tamil news



அதே போல் தான் மக்களுக்கு நல்ல சாலைகள் வேண்டுமென்றால் அதற்கு அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். விரைவுச்சாலை பயண நேரத்தை கணிசமாக குறைக்கும்,இதனால் எரிபொருள் செலவு குறையும். டில்லி - மும்பை விரைவுச் சாலை பயண நேரத்தை 12 மணி நேரமாக குறைக்கும். ஒரு லாரி டில்லியில் இருந்து மும்பையை அடைய 48 மணி நேரம் ஆகும். ஆனால் விரைவுச் சாலையில், அது 18 மணிநேரம் மட்டுமே ஆகும். இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAVIKUMAR - chennai,இந்தியா
17-செப்-202118:30:58 IST Report Abuse
RAVIKUMAR அப்போ இன்னாதுக்கு வித விதமா வரி ?
Rate this:
Cancel
RAVIKUMAR - chennai,இந்தியா
17-செப்-202118:28:54 IST Report Abuse
RAVIKUMAR அப்போ
Rate this:
Cancel
RAVIKUMAR - chennai,இந்தியா
17-செப்-202114:41:38 IST Report Abuse
RAVIKUMAR APPO
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X