பொது செய்தி

இந்தியா

மரங்களின் மீது விளம்பர அகற்ற பெங்களூரு மாநகராட்சி உத்தரவு

Added : செப் 16, 2021
Share
Advertisement
பெங்களூரு:'மரங்களின் மீது சட்டவிரோதமாக வைத்துள்ள, அனைத்து விதமான விளம்பர போர்டுகள், மற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்' என பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி வனப்பாதுகாப்பு அதிகாரி கோவிந்த ராஜு கூறியதாவது:நகரில் மரங்களில் பொருத்தப்பட்ட விளம்பர பலகைகள், மற்ற பொருட்களை, ஒரு வாரத்துக்குள் அப்புறப்படுத்தும்படி,

பெங்களூரு:'மரங்களின் மீது சட்டவிரோதமாக வைத்துள்ள, அனைத்து விதமான விளம்பர போர்டுகள், மற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்' என பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி வனப்பாதுகாப்பு அதிகாரி கோவிந்த ராஜு கூறியதாவது:நகரில் மரங்களில் பொருத்தப்பட்ட விளம்பர பலகைகள், மற்ற பொருட்களை, ஒரு வாரத்துக்குள் அப்புறப்படுத்தும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாலையோர மரங்களின் மீது, வர்த்தகர்கள், கடைகளின் உரிமையாளர்கள், விளம்பர பேனர்கள் வைக்கின்றனர். விளம்பர நிறுவனங்கள், விளம்பர பலகைகளை பொருத்தியுள்ளனர்.

கேபிள் ஆப்பரேட்டர்கள், கேபிள்களை தொங்க விடுகின்றனர்.விளம்பர பலகைகளை தொங்க விடுவதற்காக, மரத்தின் மீது ஆணிகள், பின்களை அடிக்கின்றனர்.சிலர் மின் விளக்குகளை, மரங்களில் தொங்க விடுகின்றனர்.இத்தகைய நடவடிக்கையால், மரங்களின் வளர்ச்சி தடை படுகிறது. மரங்களை சேதப்படுத்துவது, கர்நாடக மரங்கள் பாதுகாப்பு சட்டம் -1976, பிரிவு 8ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

மழைக்காலத்தில் சாலையோரங்களில் உலர்ந்துள்ள மரங்கள், மரக்கிளைகளை வெட்ட வேண்டும். இப்பணிக்கு பொது மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்.அபாய நிலையிலுள்ள மரங்கள், மரக்கிளைகளை பற்றி பொது மக்கள், அந்தந்த மண்டல வனப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X