பொது செய்தி

இந்தியா

சட்ட விரோதமாக வசிப்போரை கண்காணிக்கும் போலீஸ்

Added : செப் 16, 2021
Share
Advertisement
பெங்களூரு:''கர்நாடகாவில், சட்டவிரோதமாக வசிப்போர், குற்றச்சம்பவங்களில் ஈடுபட விடமாட்டோம். அவர்களை நம் போலீசார், உன்னிப்பாக கண்காணிக்கின்றனர்,'' என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.கர்நாடக சட்டமேலவை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:பா.ஜ., -- முனிராஜூகவுடா: மாநிலத்தில், ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக வசிக்கின்றனர். இதில் பலர் தேசத் துரோக வேலையை

பெங்களூரு:''கர்நாடகாவில், சட்டவிரோதமாக வசிப்போர், குற்றச்சம்பவங்களில் ஈடுபட விடமாட்டோம். அவர்களை நம் போலீசார், உன்னிப்பாக கண்காணிக்கின்றனர்,'' என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.

கர்நாடக சட்டமேலவை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:பா.ஜ., -- முனிராஜூகவுடா: மாநிலத்தில், ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக வசிக்கின்றனர். இதில் பலர் தேசத் துரோக வேலையை செய்கின்றனர். மும்பை தாக்குதலின் குற்றவாளி கசபுக்கு, பெங்களூரின் நாகரபாவியில், வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டதாக மும்பை விசாரணை அதிகாரி எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக வசிப்போர், ஒரு கட்சியின் ஓட்டு வங்கியாக உள்ளனர். அவர்களை காப்பாற்ற அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன. அவர்களுக்கு தேவையான, அனைத்து ஆவணங்களும் கிடைக்கிறது. சமீப நாட்களாக கோவில்கள் இடிக்கப்படுகிறது. இனி சட்டவிரோதமாக குடியிருப்போரும், கோவில்களை இடிக்கக்கூடும் என, அஞ்சுகிறோம்.

அமைச்சர் அரக ஞானேந்திரா: சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினரை, சொந்த நாட்டுக்கு அனுப்புவது பற்றி, மத்திய அரசு முடிவு செய்யும். 194 பேர் முகாம்களில் உள்ளனர். ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லையிலும், சட்டவிரோதமாக வசிப்பவர்களை கண்காணிக்கும்படி, உத்தரவிட்டுள்ளது. உள்துறை சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

விசா முடிந்த பின்னும், மாநிலத்தில் வசிப்பவர்களை என்ன செய்வது என ஆய்வு செய்யப் படும். சிவில் டிபன்ஸ் மையத்தில் ஆப்பிரிக்கா உட்பட பல்வேறு வெளி நாட்டு பிரஜைகள் வைக்கப்பட்டுள்ளனர். சிலர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. வழக்கு முடியும் வரை அவர்களை திருப்பி அனுப்ப முடியாது. கர்நாடகாவை தர்ம சத்திரமாக்க விடமாட்டோம்.

இங்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற காலம் மலையேறிவிட்டது. தற்போது சூழ்நிலை மாறியுள்ளது. அரசு, இரண்டு டாஸ்க் போர்ஸ் அமைத்து, நடவடிக்கை எடுக்கும். சட்டவிரோதமாக வசிப்போரை பற்றி நம் மக்கள் பீதியடைய வேண்டாம்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X