பொது செய்தி

இந்தியா

ரியாலிட்டி ஷோவில் கணேஷ்!

Added : செப் 16, 2021
Share
Advertisement
ரியாலிட்டி ஷோவில் கணேஷ்!சின்னத்திரையிலிருந்து, வெள்ளித்திரைக்கு வந்து ஸ்டார் ஹீரோக்கள் பட்டியலில் சேர்ந்த நடிகர்களில் கணேஷ் முதலிடத்தில் உள்ளவர். இவர் அறிமுகமான, முங்காரு மலே திரைப்படம், அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. படங்களில் பிசியாக நடிக்கும் இவர், நீண்ட இடைவெளிக்கு பின் சின்னத்திரைக்கு திரும்புகிறார். கன்னட தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும்
 ரியாலிட்டி ஷோவில் கணேஷ்!

ரியாலிட்டி ஷோவில் கணேஷ்!

சின்னத்திரையிலிருந்து, வெள்ளித்திரைக்கு வந்து ஸ்டார் ஹீரோக்கள் பட்டியலில் சேர்ந்த நடிகர்களில் கணேஷ் முதலிடத்தில் உள்ளவர். இவர் அறிமுகமான, முங்காரு மலே திரைப்படம், அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. படங்களில் பிசியாக நடிக்கும் இவர், நீண்ட இடைவெளிக்கு பின் சின்னத்திரைக்கு திரும்புகிறார். கன்னட தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும் புதிய ரியாலிட்டி ஷோவில், கணேஷ் பங்கேற்கிறார். இது பாடல் சம்பந்தப்பட்டதா அல்லது நடனம் சம்பந்தப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் வித்தியாசமான நிகழ்ச்சியாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபரிலிருந்து நிகழ்ச்சி துவங்குகிறதாம்.

கிரைம் ரிப்போர்ட்டர்!

நடிகை சுபா பூஞ்சா, அம்புஜா என்ற படத்தில் நடிப்பதாக, தகவல் வெளியாகி நீண்ட நாட்களாகியும் படம் பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. அக்டோபரில் படப்பிடிப்பை துவங்க படக்குழுவினர் ஏற்பாடு செய்கின்றனர்.இந்த படம், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை கொண்டது. சைக்கலாஜிகல் ஹாரர் படம். இதில் சுபா பூஞ்சா, கிரைம் ரிப்போர்ட்டராக நடிக்கிறார். லம்பானி கெட் அப்பில் தோன்றுகிறார். இதற்காக 20 கிலோ எடை கொண்ட உடைகள், அணிகலன்களை அணிந்துள்ளார். கதக்கின் லம்பானி காலனியில் 4 மாதம் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் தயாராகின்றனர்.

திருப்பதி நாமம்!

நடிகர் உபேந்திரா படங்கள் என்றால் பல வித்தியாசங்கள் இருக்கும். 1992ல் திரைக்கு வந்த, தர்லே நன் மகா படம் மூலம் இயக்குனரான இவர், ஓம், உபேந்திரா, ஸ்வஸ்திக் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது உபேந்திரா புதிய படமொன்றை இயக்குகிறார். படத்தின் 'போஸ்டர்' சமீபத்தில் வெளியானது. படத்துக்கு பெயரே இல்லை. பெயருக்கு பதிலாக திருப்பதி நாமம் மட்டுமே உள்ளது. வித்தியாசமான இந்த போஸ்டர் 'சோஷியல் மீடியா'க்களில் வெளியாகி, வைரலாக பரவியது. நீண்ட இடைவெளிக்கு பின், உபேந்திரா இயக்கும் படம் என்பதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கின்றனர்.

இணை பிரியா தோழிகள்!

மூத்த நடிகைகள் சுதாராணி, ஸ்ருதி, மாளவிகா அவினாஷ் ஆகியோர் நெருங்கிய தோழிகள். இம்மூவரும் அவ்வப்போது சந்தித்து ஜாலியாக பொழுது போக்குவர். சில நாட்களுக்கு முன் சுதாராணி பிறந்த நாளை அவரது வீட்டில் ஸ்ருதியும், மாளவிகாவும் கொண்டாடினர். கேழ்வரகு களி சமைத்து பார்ட்டி நடத்தினர். ஸ்ருதி களி கிண்டுவது; மாளவிகா, சுதாராணி அரட்டை அடிக்கும் போட்டோ, வீடியோ சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டுள்ளனர். மூன்று தோழிகள் 'செல்பி'யும் எடுத்துள்ளனர்.

புதிய ஆக்ஷன் ஹீரோயின்!

சாண்டல்வுட்டில் சமீப ஆண்டுகளாக ஆக்ஷன் ஹீரோயின்களின் படங்கள் வரவில்லை. நடிகை மாலாஸ்ரீ ஆக் ஷன் படங்கள், சண்டைக்காட்சிகளில் பட்டையை கிளப்புவார். கன்னடத்தில் ஆக்ஷன் ஹீரோயின் வெற்றிடத்தின் இடத்தை நிரப்ப புதிதாக வந்துள்ளவர் ரிதன்யா ஹூவன்னா. மர்தினி மூலம் சாண்டல்வுட்டில் அறிமுகமகமாகியுள்ளார். பொறியியல் பட்டதாரியான இவர், மாடலிங்கிலிருந்து நடிப்புக்கு வந்தவர். விளம்பரங்கள், ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றவர். அறிமுகமான முதல் படத்திலேயே, போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரம் கிடைத்துள்ளது. காக்கி சீருடையில் மிடுக்காக தென்படும் ரிதன்யா, சண்டைக்காட்சிகளிலும் மிரட்டுகிறாராம்.

உண்மையான பாசம்!

நடிகை ரசிதா ராம் செம குஷியில் திளைக்கிறார். இதற்கு காரணம் அவரது தங்கை நித்யா ராம். ஒன்றரை ஆண்டுக்கு முன், இவர் திருமணமாகி வெளிநாடு சென்றார். தங்கையின் பிரிவு, ரசிதா ராமை வாட்டி வதைத்ததாம். தற்போது பண்டிகைக்காக நித்யா ராம் பிறந்த வீட்டுக்கு வந்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் தங்கையுடன் சேர்ந்து ரசிதா ராம் பொழுது போக்குகிறார். தன் மகிழ்ச்சியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார். நித்யாவும் கூட நடிகைதான். இவரது நடிப்பில், சின்னத்திரையில் ஒளிபரப்பான நந்தினி தொடரை, யாரும் மறந்திருக்க முடியாது. இதில் பாம்பாக, பெண்ணாக நித்யா இரட்டை வேடங்களில் கலக்கினார்.

அவர் வருவாரா?

விஷ்ணுவர்த்தன் நடிப்பில் 2002ல் திரைக்கு வந்த, பர்வா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை அமுல்யா. செலுவின சித்தாரா திரைப்படம், அவருக்கு நாயகி அந்தஸ்தை பெற்றுத்தந்தது. அதன்பின் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். துனியா விஜயின், மாஸ்திகுடி அமுல்யா நடித்து கடைசியாக வெளிவந்த படம். 2017 க்கு பின் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. புகழின் உச்சியில் இருக்கும் போதே, திருமணம் செய்து கொண்டு, நடிப்பை விட்டு ஒதுங்கினார். மீண்டும் அவர் நடிப்புக்கு திரும்புவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X