இதே நாளில் அன்று| Dinamalar

இதே நாளில் அன்று

Added : செப் 16, 2021
Share
செப்., 17, 1950குஜராத் மாநிலம் மேக்சானா மாவட்டத்தில் உள்ள வாத்நகரில் 1950 செப்., 17ல் பிறந்தவர் நரேந்திர மோடி. வாத்நகர் ரயில் நிலையத்தில் உள்ள தன் தந்தையின் டீக்கடையில் உதவிகள் செய்வார். தன் 8வது வயதிலேயே, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். குஜராத் பல்கலையில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார்.'அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்' அமைப்பின் குழு


இதே நாளில் அன்று


செப்., 17, 1950



குஜராத் மாநிலம் மேக்சானா மாவட்டத்தில் உள்ள வாத்நகரில் 1950 செப்., 17ல் பிறந்தவர் நரேந்திர மோடி. வாத்நகர் ரயில் நிலையத்தில் உள்ள தன் தந்தையின் டீக்கடையில் உதவிகள் செய்வார். தன் 8வது வயதிலேயே, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார். குஜராத் பல்கலையில் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார்.'அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்' அமைப்பின் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

பா.ஜ.,வில் உறுப்பினராக சேர்ந்து, குஜராத் மாநில பொது செயலராக நியமிக்கப்பட்டார். 1998ல் பா.ஜ., தேசிய செயலராக உயர்ந்தார்.கடந்த 2001ல் குஜராத் முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்று, குஜராத் முதல்வராக பதவி வகித்து சாதனை படைத்தார். 2014ல், நாட்டின் 13வது பிரதமராக பொறுப்பேற்றார். 'டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா' உட்பட ஏராளமான திட்டங்கள் தீட்டியுள்ளார். 2019 லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்று, பிரதமராக உள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினம் இன்று!


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X