சீனாவை எதிர்கொள்ள ஆஸி.,-பிரிட்டன்-அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் நிறைவேற்றம்

Updated : செப் 16, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
லண்டன்: இந்தோபசிபிக் பகுதியில் அமைதி நிலவ பிரிட்டன் போரிஸ் ஜான்சன் அரசு தற்போது ஆஸ்திரேலியாவுடன் போர் ஒப்பந்தம் இட்டுள்ளது. அணு ஆயுதத்தை தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்கள் முக்கிய போர் ஆயுதங்களாக பயன்படுத்தப் படுகின்றன. இரு நாட்டுக் கப்பற்படைகளுக்கு இடையே போர் நடைபெறும்போது கடலுக்கு அடியில் உள்ள நீர்மூழ்கிக் போர் கப்பல் இலக்கை துல்லியமாகத் தாக்க அதில் அணு

லண்டன்: இந்தோபசிபிக் பகுதியில் அமைதி நிலவ பிரிட்டன் போரிஸ் ஜான்சன் அரசு தற்போது ஆஸ்திரேலியாவுடன் போர் ஒப்பந்தம் இட்டுள்ளது.



latest tamil news



அணு ஆயுதத்தை தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்கள் முக்கிய போர் ஆயுதங்களாக பயன்படுத்தப் படுகின்றன. இரு நாட்டுக் கப்பற்படைகளுக்கு இடையே போர் நடைபெறும்போது கடலுக்கு அடியில் உள்ள நீர்மூழ்கிக் போர் கப்பல் இலக்கை துல்லியமாகத் தாக்க அதில் அணு ஆயுதம் பொருத்தப்படுகிறது.

உலகின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்த அணுவாயுத போர்க்கப்பல் அவ்வப்போது சிறிய நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது அமெரிக்கா-ஆஸ்திரேலியா-பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே உருவாக்கப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் இந்தோ பசிபிக் பகுதியில் அமைதியை ஏற்படுத்த தவிர மற்ற நாடுகளை அச்சுறுத்திய அல்ல என்று பிரிட்டன் நாடாளுமன்ற கூட்டத்தில் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து கடந்த ஜனவரி மாதம் பிரிட்டன் முழுவதுமாக வெளியேறியதை அடுத்து ஆசிய நாடுகளுடன் இன்னும் இணக்கமான வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்த போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். இதன் முதல்படியாக தற்போது இந்த ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஸ்காட் மோரிசன் ஆகியோருடன் போரிஸ் ஜான்சன் விவரித்துள்ளார். இந்த ஒப்பந்தத்திற்கு ஆகஸ்(AKUS) என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் சீனா தனது ராணுவ பலத்தை அதிகரித்து வந்ததை அடுத்து அமெரிக்கா-பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் அச்சுறுத்தலுக்குள்ளாகின. இந்த அணு நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் மூலமாக சீனாவால் அச்சுறுத்தப்பட்ட இந்த நாடுகள் சீனாவை எதிர்கொள்ளத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
17-செப்-202112:02:38 IST Report Abuse
J. G. Muthuraj வெள்ளைக்கார ஆசாமிகளே ஆசியாவிலுள்ள பிரௌனும் (இந்தியா) எல்லோவும் (ஜப்பான்) உங்களோடு சேரக்கூடாதா?.. ஆசிய நாடுகளின் பாதுகாப்புதான் முக்கியம்.. அதற்கப்புறம் தான் தூரத்தில் உள்ள உங்கள் நாடுகள் பாதுகாப்பு....
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
17-செப்-202111:31:01 IST Report Abuse
Duruvesan தஞ்சை மன்னர் namaaz ஆச்சா?
Rate this:
Cancel
17-செப்-202108:28:30 IST Report Abuse
அப்புசாமி அடி சக்கை. நம்மளை கழட்டி உட்டுட்டாங்களே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X