பொது செய்தி

இந்தியா

வங்கி கணக்கில் ரூ.900 கோடி பீஹார் மாணவர்கள் ஆச்சர்யம்

Added : செப் 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பாட்னா:'பள்ளி சீருடைக்கான அரசு வழங்கும் நிதி உதவித்தொகை வந்துஉள்ளதா...' என, வங்கிக் கணக்கை பார்த்த பீஹாரைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி ஏற்பட்டது; அவர்களது கணக்கில் 900 கோடி ரூபாய் பணம் இருந்தது.பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், பள்ளி

பாட்னா:'பள்ளி சீருடைக்கான அரசு வழங்கும் நிதி உதவித்தொகை வந்துஉள்ளதா...' என, வங்கிக் கணக்கை பார்த்த பீஹாரைச் சேர்ந்த இரண்டு மாணவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி ஏற்பட்டது; அவர்களது கணக்கில் 900 கோடி ரூபாய் பணம் இருந்தது.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், பள்ளி சீருடைக்கான அரசு உதவித்தொகை வந்துள்ளதா என, பொது 'இன்டர்நெட்' மையம் வாயிலாக, உத்தர் பீஹார் கிராமிய வங்கியில் உள்ள தங்கள் கணக்கை பார்த்துள்ளனர்.அதில், ஆறாம் வகுப்பு படிக்கும் ஆஷிஷ் என்ற மாணவரின் வங்கிக் கணக்கில் 6.2 கோடி ரூபாய் இருப்பது தெரியவந்துஉள்ளது. மற்றொரு மாணவரான குருசரண் விஷ்வாஸ் கணக்கில் 900 கோடி ரூபாய் பணம் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆனந்த அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இது தெரிய வந்ததும், ஊரில் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் கணக்கிலும் பணம் வந்துள்ளதா என்பதை பார்க்க, இன்டர் நெட் மையம், ஏ.டி.எம்., மையங்களில் முண்டிஅடித்தனர்.

இது குறித்து, மாவட்ட கலெக்டர் உதயன் மிஸ்ரா கூறியுள்ளதாவது:வங்கியைத் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தோம். சில தொழில்நுட்பக் கோளாறு களால் அந்த மாணவர்களின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான பணம் இருப்பதாக காட்டப்பட்டு உள்ளது. ஆனால், உண்மையில் அவர்களது கணக்கில் அந்தப் பணம் இல்லை. இருப்பினும் அனைத்து கணக்குகளையும் சரிபார்க்க வங்கி நடவடிக்கை எடுத்துஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோன்ற சம்பவம் பீஹாரில் இதற்கு முன்பும் நடந்துள்ளது. பாட்னா புறநகர் பகுதியில் உள்ள ஒருவரது கணக்கில், தவறுதலாக 5 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. அந்த நபர் அந்தப் பணத்தை உடனடியாக எடுத்துள்ளார். வங்கியிடம் திருப்பித் தர மறுத்துள்ளார். 'அரசின் உதவியாக, பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிய பணம் இது' என, அவர் கூறினார். பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
17-செப்-202108:40:49 IST Report Abuse
R.RAMACHANDRAN குற்றவாளிகளான வங்கி ஊழியர்களுக்கு தண்டனை இல்லை இந்த நாட்டில் என்பதால் அவர்கள் எதை எதையோ செய்து கொண்டுள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X