பாலங்களை தகர்க்க சதி பயங்கரவாதிகள் கைது

Added : செப் 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:ரயில் தண்டவாள பாலங்களை வெடிகுண்டு கள் வைத்து தகர்க்க திட்டமிட்டிருந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 1.5 கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. டில்லி போலீஸ் சிறப்பு படையினர், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த ஜீஷன், ஒசாமா ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் ஐ.எஸ்., பயங்கரவாத
 பாலங்களை தகர்க்க சதி பயங்கரவாதிகள் கைது

புதுடில்லி:ரயில் தண்டவாள பாலங்களை வெடிகுண்டு கள் வைத்து தகர்க்க திட்டமிட்டிருந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 1.5 கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

டில்லி போலீஸ் சிறப்பு படையினர், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த ஜீஷன், ஒசாமா ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து 1.5 கிலோ ஆர்.டி.எக்ஸ்., எனப்படும் சக்தி வாய்ந்த வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

நம் நாட்டில் ரயில் தண்டவாளங்கள் மற்றும் போக்குவரத்து மிகுந்த பாலங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்க இவர்கள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாக்.,கிலிருந்து ஊடுருவியுள்ள மேலும் பலர் விரைவில் கைது செய்யப்படுவர் என, டில்லி போலீஸ் அதிகாரிகள் கூறினர்.மேற்கு வங்கத்தின் ஜியோனி என்ற கிராமத்தில், ஒரு பண்ணை வீட்டில் இருவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
17-செப்-202104:57:43 IST Report Abuse
Milirvan ///மேற்கு வங்கத்தின் ஜியோனி என்ற கிராமத்தில்,/// இல்லை... இந்த ஜியோனி இருப்பது பக்கி'ஸ்தானின் குவாடர் அருகில்.. மாட்டிய கழிசடைகள் தான் பங்களாதுவேஷிகள்.. பங்களா முக்திபாஹினிக்களுக்கு உதவி செய்வது போல கிழக்கு பக்கி'ஸ்தானை கூறு போட்டு பங்களா/தனி தேசமாக்கி, பக்கி'களுக்கு கடுமையான க்ஷத்திர சிகிச்சை அளித்தது பாரதம்.. அந்த வலியை மறக்க முடியாமல் இன்னமும் ஊளையிட்டுக்கொண்டு ஏதாவது சொறிந்து கொண்டிருப்பது தான் பக்கி'ஸ்தான்.. தன்னை உதைத்தவனை வைத்தே மார்க்கம் என்கிற முக்காட்டுக்குள் ஒளிந்து பாரதத்தை கடிக்க துடிக்கிறது.. சோத்துக்கே பிச்சை எடுத்தாலும், நாட்டையும், பெண்டுபிள்ளைகளையும் அடமானம் வைத்தாலும், கதற கதற அடிவாங்கிக் கொண்டு அலையகுலைய தெறித்து ஓடி ஒளிந்தாலும் திரும்ப திரும்ப சொறிந்து கொண்டிருப்பது தான் இவர்களின் டிசைன். பொறுங்கள்..பலூச்சி'ஸ்தானும், தாலிபானும், சீனன் பிடுங்கியதுபோக பாக்கியுள்ள நிலத்தை ஆட்டையை போடுவதை திவ்வியமாக தரிசிக்கலாம்.. பக்கி'கள் புதைகுழியினுள் இறங்கியாயிற்று..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X