பாலங்களை தகர்க்க சதி பயங்கரவாதிகள் கைது| Dinamalar

பாலங்களை தகர்க்க சதி பயங்கரவாதிகள் கைது

Added : செப் 16, 2021 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி:ரயில் தண்டவாள பாலங்களை வெடிகுண்டு கள் வைத்து தகர்க்க திட்டமிட்டிருந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 1.5 கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. டில்லி போலீஸ் சிறப்பு படையினர், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த ஜீஷன், ஒசாமா ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் ஐ.எஸ்., பயங்கரவாத
 பாலங்களை தகர்க்க சதி பயங்கரவாதிகள் கைது

புதுடில்லி:ரயில் தண்டவாள பாலங்களை வெடிகுண்டு கள் வைத்து தகர்க்க திட்டமிட்டிருந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 1.5 கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

டில்லி போலீஸ் சிறப்பு படையினர், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த ஜீஷன், ஒசாமா ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து 1.5 கிலோ ஆர்.டி.எக்ஸ்., எனப்படும் சக்தி வாய்ந்த வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

நம் நாட்டில் ரயில் தண்டவாளங்கள் மற்றும் போக்குவரத்து மிகுந்த பாலங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்க இவர்கள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பாக்.,கிலிருந்து ஊடுருவியுள்ள மேலும் பலர் விரைவில் கைது செய்யப்படுவர் என, டில்லி போலீஸ் அதிகாரிகள் கூறினர்.மேற்கு வங்கத்தின் ஜியோனி என்ற கிராமத்தில், ஒரு பண்ணை வீட்டில் இருவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X