அனைவரும் ஆதரவு! | Dinamalar

அனைவரும் ஆதரவு!

Added : செப் 16, 2021
Share
அனைவரும் ஆதரவு! உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.சி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மஹாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பட்னவிஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினருடன் கலந்துஉரையாடிய பின்பே இந்த முடிவை எடுத்தோம்.அஜித் பவார்மஹா., துணை முதல்வர், தேசியவாத காங்.,கடும் நடவடிக்கை!மதச்சார்பின்மை மற்றும் சகோதரத்துவத்தை நிரம்ப பெற்றுள்ள மாநிலமாக கேரளா
 அனைவரும் ஆதரவு!

அனைவரும் ஆதரவு!

உள்ளாட்சி தேர்தலில் ஓ.பி.சி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மஹாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பட்னவிஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினருடன் கலந்துஉரையாடிய பின்பே இந்த முடிவை எடுத்தோம்.

அஜித் பவார்

மஹா., துணை முதல்வர்,

தேசியவாத காங்.,

கடும் நடவடிக்கை!

மதச்சார்பின்மை மற்றும் சகோதரத்துவத்தை நிரம்ப பெற்றுள்ள மாநிலமாக கேரளா உள்ளது. இதை சீர்குலைத்து, மாநிலத்தில் பதற்றத்தை உருவாக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பினராயி விஜயன்

கேரள முதல்வர், மார்க்சிஸ்ட்

பங்கு போச்சு!

பெட்ரோலிய பொருட்களினால் மத்திய கலால் வரியில் இருந்து மாநிலங்களுக்கு ஒரு பங்கு கிடைத்து வந்தது. எனினும் 3 - 4 சதவீத 'செஸ்' வரியை மத்திய அரசு வசூலிப்பதால் அந்த கலால் வரியில் இருந்து மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு பாதிக்கப்படுகிறது.

பூபேஷ் பாகேல்

சத்தீஸ்கர் முதல்வர், காங்.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X