'சல்யூட்' அடிப்பதில் பாரபட்சம் நடிகர் சுரேஷ் கோபி ஆவேசம்

Added : செப் 16, 2021
Share
Advertisement
கோட்டயம்:கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. பிரபல நடிகர் சுரேஷ் கோபி, பா.ஜ.,வின் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்.திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புதுார் கிராமத்தில், வெள்ளம் பாதித்த இடங்களை சுரேஷ் கோபி சமீபத்தில் பார்வையிட்டார். தன்னை கவனிக்காமல் இருந்த சப் - இன்ஸ்பெக்டரை அழைத்து, தனக்கு 'சல்யூட்' செய்யும்படி கோரினார். இது
 'சல்யூட்' அடிப்பதில் பாரபட்சம் நடிகர் சுரேஷ் கோபி ஆவேசம்

கோட்டயம்:கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

பிரபல நடிகர் சுரேஷ் கோபி, பா.ஜ.,வின் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்.திருச்சூர் மாவட்டத்தில் உள்ள புதுார் கிராமத்தில், வெள்ளம் பாதித்த இடங்களை சுரேஷ் கோபி சமீபத்தில் பார்வையிட்டார். தன்னை கவனிக்காமல் இருந்த சப் - இன்ஸ்பெக்டரை அழைத்து, தனக்கு 'சல்யூட்' செய்யும்படி கோரினார். இது தொடர்பான, 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சுரேஷ் கோபியின் செயலுக்கு கேரள போலீஸ் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:போலீசார், சல்யூட் அடிக்கும் பிரிவில் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் இல்லை எனக் கூறியுள்ளனர். ஆனாலும், அவ்வாறு சல்யூட் அடித்து மரியாதை செய்வது வழக்கமாக உள்ளது.என்னைப் பொறுத்தவரை சல்யூட் அடிப்பதை முற்றிலுமாக நிறுத்தி விடலாம். அதே நேரத்தில் அரசியல் கட்சிகள் இடையே பாரபட்சம் காட்டப்படுவதை ஏற்க முடியாது. இதில் போலீசார் அரசியல் செய்யக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

பாதிரியாருடன் சந்திப்பு

கோட்டயத்தை அடுத்துள்ள பாலாவைச் சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியார் ஜோசப் கலாரங்கட், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, 'கிறிஸ்துவ இளம்பெண்களை லவ் ஜிகாத் மற்றும் போதைப்பொருள் ஜிகாத் வாயிலாக சிலர் சிக்க வைத்து வருகின்றனர்' எனக் குறிப்பிட்டார்.இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பாதிரியாரை சுரேஷ் கோபி சந்தித்து பேசினார்.''எந்த மதத்தினரையும் குறிப்பிட்டு பேசவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். மத ரீதியில் மோதல் ஏற்படுத்தும் வகையில் அவருடைய பேச்சு இல்லை,'' என, சுரேஷ் கோபி குறிப்பிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X