பொது செய்தி

இந்தியா

கணவரின் நடவடிக்கை: கைவிரித்த ஷில்பா

Added : செப் 16, 2021
Share
Advertisement
மும்பை:பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, 45, மும்பையில் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். ஆபாச படங்கள் தயாரித்து 'மொபைல் ஆப்' வாயிலாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில், குந்த்ராவின் மனைவியான நடிகை ஷில்பா ஷெட்டியையும் ஒரு சாட்சியாக சேர்த்துள்ளனர்.போலீசில் ஷில்பா அளித்துள்ள
 கணவரின் நடவடிக்கை: கைவிரித்த ஷில்பா

மும்பை:பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, 45, மும்பையில் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். ஆபாச படங்கள் தயாரித்து 'மொபைல் ஆப்' வாயிலாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில், குந்த்ராவின் மனைவியான நடிகை ஷில்பா ஷெட்டியையும் ஒரு சாட்சியாக சேர்த்துள்ளனர்.போலீசில் ஷில்பா அளித்துள்ள வாக்குமூலத்தில், 'கணவரின் நடவடிக்கை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் என் வேலைகளில் மிகவும் பிசியாக இருந்தேன்' எனக் கூறியுள்ளார்.

நடிகை ஷில்பா ஷெட்டி நேற்று முன்தினம், ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி மலைக்கோவிலில் வழிபாடு செய்தார். வழிபாட்டுக்கு பின், நிருபர்களிடம் பேசிய அவர், 'வைஷ்ணவி தேவி கோவிலில் வழிபாடு செய்த பின் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X