பாலியல் வன்கொடுமை வழக்கு தலைநகர் டில்லியில் தான் அதிகம்

Added : செப் 16, 2021
Share
Advertisement
புதுடில்லி:டில்லியில் கடந்த ஆண்டு அதிக கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தேசிய குற்ற ஆவண பணியகம் தெரிவித்துள்ளது.நம் நாட்டில் கடந்த ஆண்டு நடந்த கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த தகவல்களை, மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும், என்.சி.ஆர்.பி., எனப்படும் தேசிய குற்ற ஆவண பணியகம் வெளியிட்டது.இது குறித்து

புதுடில்லி:டில்லியில் கடந்த ஆண்டு அதிக கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தேசிய குற்ற ஆவண பணியகம் தெரிவித்துள்ளது.

நம் நாட்டில் கடந்த ஆண்டு நடந்த கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த தகவல்களை, மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும், என்.சி.ஆர்.பி., எனப்படும் தேசிய குற்ற ஆவண பணியகம் வெளியிட்டது.இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்குக்கு மத்தியில் நம் நாட்டில் மொத்தமாக 1,849 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ நகரங்களில் அதிக கொலை வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.அதிகபட்சமாக டில்லியில் 461 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெங்களூரில் 179; மும்பையில் 148, சூரத்தில் 116; கோல்கட்டாவில் 53; சென்னையில் 15 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனினும் 2019ம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு 8.3 சதவீதம் குறைவான கொலை வழக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் கடந்த ஆண்டு 2,533 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக டில்லியில் 967 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெய்ப்பூரில் 409; மும்பையில் 322; பெங்களூரில் 108; சென்னையில் 31; கோல்கட்டாவில், 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக குற்றங்கள் இழைத்தாக 35 ஆயிரத்து 331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2019ஐ காட்டிலும் 21.1 சதவீதம் குறைவு இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X