பொது செய்தி

இந்தியா

உலகளவில் வேகமான வளர்ச்சியில் முதலிடத்தில் இந்தியா; அடுத்தது சீனா

Updated : செப் 18, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி : உலகிலேயே மிகவும் வேகமாக வளரக்கூடிய பொருளாதாரமாக இந்தியா இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. உலகளவிலான பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவை அடுத்து சீனா இருக்கும் என்றும், அந்த ஆய்வு தன் கணிப்பை வெளியிட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த கூட்டத்தில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில்
உலகம், வேகமான வளர்ச்சி, முதலிடம், இந்தியா; அடுத்தது சீனா

புதுடில்லி : உலகிலேயே மிகவும் வேகமாக வளரக்கூடிய பொருளாதாரமாக இந்தியா இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. உலகளவிலான பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவை அடுத்து சீனா இருக்கும் என்றும், அந்த ஆய்வு தன் கணிப்பை
வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த கூட்டத்தில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இந்தியா, 2022ம் ஆண்டில் 6.7 சதவீதம் வளர்ச்சி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுவே, உலகின் மிக வேகமான வளர்ச்சியாக இருக்கும்.சீனா 5.7 சதவீத வளர்ச்சியை பெறும் என கணிக்கப்பட்டு, இரண்டாவது இடத்தில் உள்ளது.

இருப்பினும், 2021ல் சீனாவின் வளர்ச்சி 8.3 சதவீதமாக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சி 2021ல் 7.2 சதவீதமாக இருக்கும்.உலகளவிலான பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாக இருக்கும். இது, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியாக இருக்கும்.சில நாடுகள், 2019ல் இருந்த வளர்ச்சியை விட கூடுதல் வளர்ச்சியை காணும். இருப்பினும், மேற்கொண்டு கொரோனா பாதிப்புகள் அதிகம் இருக்காது என கொண்டாலும் கூட, பல நாடுகள் கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சியை காண, 2030ம் ஆண்டு வரைகூட ஆகக் கூடும். இது, இரண்டாவது உலகப் போருக்குப் பிந்தைய நிலையை நினைவுபடுத்துவதாக இருக்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
17-செப்-202119:20:08 IST Report Abuse
M  Ramachandran இந்த ஊடகங்கள் சிலருக்கு வயிற்ட்எரிச்சலை உண்டுபண்ணும் செய்திகளை ஏன் தான் போடுகிறார்களோ. வயிற்ட்எரிச்சலை இன்னும் அதிகரிக்கிறது. நிறைய ஜெலுசில் போட வேண்டியதாக இருக்கும்.
Rate this:
Cancel
enkeyem - sathy,இந்தியா
17-செப்-202117:43:39 IST Report Abuse
enkeyem இங்கே எதிர் கருத்து போட்டிருப்பவர்கள் கூரான லாக்டவ்ன் காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி படுகுழியில் வீழ்ந்துவிட்டது, இனி இந்தியா அவ்வளவு தான் என்று கொக்கரித்தவர்கள் தானே. இப்போது வளர்ச்சி உயர்வு என்பதை எப்படி அவர்களால் ஜீரணிக்க முடியும்? அதுதான் அடி வயிறு எரிகிறது அந்த மூர்க்கங்களுக்கு. அவர்களது புலம்பலை கண்டு கொள்ளாதீர்கள்
Rate this:
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
17-செப்-202116:43:38 IST Report Abuse
Believe in one and only God மற்ற நாடுகள் already வளர்ச்சி அடைந்து விட்டது. மோடி ஆட்சியில் ஏழை நாடானது. யாரிடமும் பணம் இல்லை. இன்னும் மோடிக்கு மக்கள் சப்போர்ட் செய்வது முட்டாள்தனமானது மோடி ஒழிக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X