பொது செய்தி

தமிழ்நாடு

அரசினர் தோட்டத்தில் தலைமை செயலகம்?'இப்போதைக்கு இல்லை' என அறிவிப்பு!

Updated : செப் 18, 2021 | Added : செப் 16, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை :'கட்டடத்தின் பெருமை மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மீண்டும் பழைய கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது' என, பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் 2010ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் புதிய சட்டசபை வளாகம் மற்றும் தலைமை செயலகம் கட்டப்பட்டது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 2014ல் இது அரசு பல்நோக்கு
அரசினர் தோட்டம், தலைமை செயலகம்?', இல்லை',அறிவிப்பு!

சென்னை :'கட்டடத்தின் பெருமை மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே, அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மீண்டும் பழைய கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது' என, பொதுப்
பணித் துறையினர் தெரிவித்தனர்.
சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் 2010ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் புதிய சட்டசபை வளாகம் மற்றும் தலைமை செயலகம் கட்டப்பட்டது. அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 2014ல் இது அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. தற்போது, இங்கு ஏராளமானோர் உயர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அருகே, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரிக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு இயங்கிவருகின்றன.


தி.மு.க., அரசு மீண்டும் பொறுப்பேற்ற நிலையில், இந்த கட்டடத்தை மீண்டும் சட்டசபை மற்றும் தலைமை செயலகமாக மாற்ற திட்டமிட்டு உள்ளதாகதகவல் வெளியானது.இந்நிலையில், மருத்துவமனையின் முன்பக்கத்தில், புதிய தலைமை செயலகம் திறப்புக்கான கல்வெட்டு நேற்று முன்தினம் மீண்டும் பொருத்தப்பட்டது. இதனால் மருத்துவமனை, தலைமை செயலகமாக மாற்றப்படுமோ என நோயாளிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பார்ப்பதற்கு பிரமாண்ட சிவலிங்கம் போன்று காணப்படும் இந்த கட்டடத்தில், சட்டசபை மட்டுமின்றி, முதல்வர், அமைச்சர்கள், துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஒரே இடத்தில் அறைகள் அமைக்கப்பட்டன.
அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டாலும், இந்த கட்டடத்தின் பெருமை மற்றும் வரலாறு மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே, அகற்றப்பட்ட கல்வெட்டுகள் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளன. வேறு எந்த காரணமும் இப்போதைக்கு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
17-செப்-202108:10:16 IST Report Abuse
VENKATASUBRAMANIAN அப்புறம் எதற்கு இந்த கல்வெட்டு மறுபடியும் வருகிறது
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
17-செப்-202107:39:14 IST Report Abuse
Svs Yaadum oore தி மு க கட்டிய சட்டசபை வளாகம் மற்றும் தலைமை செயலகம் அ தி மு க ஆட்சி வந்த வுடன் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அதற்கே தண்ட செலவு . இப்பொது தி மு க வந்தவுடன் கிண்டியில் புதிய பல் நோக்கு மருத்துவமனை என்று அறிவிப்பு . மேலும் கல்லறை போல் இருக்கும் கட்டடத்தின் வரலாறு தெரிய கல்வெட்டுகள் மீண்டும் பொருத்தப் பட்டதாம். இதே நேரத்தில் தி மு க அல்லக்கைகள் மூலம் மீண்டும் தலைமை செயலகம் மாற்ற பட வேண்டும் என்று கோரிக்கை . இன்னும் ஆறு மாதம் கழித்து பலத்த மக்கள் கோரிக்கையாக மாறி அரசு பணிந்து தலைமை செயலகம் மீண்டும் தண்ட செலவு செய்து மாற்றப்படும் . இதுதான் திராவிட பகுத்தறிவு .
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-செப்-202105:06:44 IST Report Abuse
Mani . V இப்போதைக்கு இல்லை, சாத்தியமில்லை. மொத்தத்தில் "இல்லாத" அரசு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X