பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆறுதல் இன்ஜி., தர வரிசையில் மறுவாய்ப்பு

Added : செப் 16, 2021
Share
Advertisement
சென்னை:''இன்ஜினியரிங் கவுன்சிலிங் தர வரிசையில் விடுபட்ட மாணவர்கள் விண்ணப்பித்தால், அவர்களின் பெயர், பட்டியலில் சேர்க்கப்படும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை 'கவுன்சிலிங்'குக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, இம்மாதம் 14ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியானது. நேற்று

சென்னை:''இன்ஜினியரிங் கவுன்சிலிங் தர வரிசையில் விடுபட்ட மாணவர்கள் விண்ணப்பித்தால், அவர்களின் பெயர், பட்டியலில் சேர்க்கப்படும்,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை 'கவுன்சிலிங்'குக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, இம்மாதம் 14ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியானது. நேற்று முன்தினம் கவுன்சிலிங் துவங்குவதாக அறிவிக்கப் பட்டது.

ஆனால், கவுன்சிலிங்குக்கு தேவையான முன்னேற்பாடுகள் சரிவர மேற்கொள்ள வில்லை; 'ஆன்லைன்' வசதிகளும் செய்யப்படவில்லை.அரசு பள்ளி மாணவர்கள் சிலரது பெயர்கள் தரவரிசை பட்டியலில் விடுபட்டன. அதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, 'சாய்ஸ் பில்லிங்' வசதியும், இணையதளத்தில் மேற்கொள்ளப்படவில்லை.

இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, செயலர் கார்த்திகேயன் ஆகியோர் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின், அமைச்சர் பொன்முடி கூறியதாவது:அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் கூட விடுபடாமல், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்தப்படும். ஏதாவது பிரச்னைகள் இருந்தால் எல்லாம் சரிசெய்யப்படும். தர வரிசையில், அரசு பள்ளி மாணவர்கள் சிலரது பெயர்கள் விடுபட்டதாக புகார்கள் வந்துள்ளன

.அரசு பள்ளிகளில், ஆறு முதல் பிளஸ் 2 வரை படித்துள்ள மாணவர்கள் யாருடைய பெயர் விடுபட்டாலும், அவர்களின் பெயர் மீண்டும் தரவரிசை பட்டியலில் சேர்க்கப்படும். இது குறித்து, இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள போன் எண்களிலும், உதவி மையங்களையும் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

விடுபட்ட மாணவர்களை சேர்க்கும்போது, அவர்களது மதிப்பெண்ணுக்கு ஏற்ற இடங்களை ஒதுக்குவோம்.கவுன்சிலிங் தொடர்பாக உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் களையும் பின்பற்றி நடக்க, தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

புது அட்டவணை

இன்ஜி., கவுன்சிலிங்கில், நேற்று முன்தினம் ஏற்பட்ட குளறுபடியை தொடர்ந்து, நேற்று கவுன்சிலிங்கில் இடங்கள் ஒதுக்குவது நிறுத்தப்பட்டது.அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் சிறப்பு பிரிவினருக்கு, கவுன்சிலிங்குக்கான புதிய அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, அரசு பள்ளி மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்கள், கலந்தாய்வுக்கான கட்டணத்தை இன்று முதல் 19ம் தேதி மாலை 5:00 மணிக்குள் செலுத்த வேண்டும்.வரும் 20ம் தேதி முதல், 'ஆன்லைன்' வழி 'சாய்ஸ் பில்லிங்' வசதி துவங்கும். வரும் 21ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விருப்ப பாடம் மற்றும் கல்லுாரிகளை பதிவு செய்ய வேண்டும். வரும் 22ம் தேதி தோராய ஒதுக்கீடு, 24ம் தேதி தற்காலிக ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்லுாரி தர வரிசை எப்போது?

உயர் நீதிமன்ற உத்தரவுகளின்படி, கவுன்சிலிங்கில் இடம் பெறும் அண்ணா பல்கலையின் இணைப்பு இன்ஜினியரிங் கல்லுாரிகளின், முந்தைய இரண்டு செமஸ்டர்களின் தேர்ச்சி சதவீதம் குறித்த தர வரிசை பட்டியலை கவுன்சிலிங் கமிட்டி வெளியிட வேண்டும். ஒரே மாதிரியான கல்லுாரிகளின் பெயர்கள், கல்லுாரிகளின் சரியான கவுன்சிலிங் குறியீட்டு எண்கள் போன்றவற்றையும் வெளியிட வேண்டும்.

மாணவர்கள் சரியான கல்லுாரியை தேர்வு செய்ய இந்த வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன. இதை நேற்று மாலை வரை, இன்ஜி., இணையதளத்தில் வெளியிடவில்லை. இது குறித்து, உயர் கல்வி செயலர் கார்த்திகேயன் கூறுகையில், ''கல்லுாரிகளின் தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலையில் பெற்று வெளியிடப்படும். கல்லுாரிகளின் பெயர் மற்றும் குறியீட்டு எண்களும் விரைவில் வெளியிடப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X