பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை மருத்துவமனை அமைக்க முதல்வருக்கு மனு

Added : செப் 16, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றியம், கோதவாடியில் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் அதிகளவு ஈடுபட்டுள்ளனர். கோதவாடியில் பல ஆண்டுகளாக, கால்நடை மருத்துவமனை அல்லது மருந்தகம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். பலமுறை எம்.எல்.ஏ., மற்றும் கால்நடை துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில்,

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றியம், கோதவாடியில் விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் அதிகளவு ஈடுபட்டுள்ளனர். கோதவாடியில் பல ஆண்டுகளாக, கால்நடை மருத்துவமனை அல்லது மருந்தகம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். பலமுறை எம்.எல்.ஏ., மற்றும் கால்நடை துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.இந்நிலையில், கோதவாடி ஊராட்சி தலைவர் ரத்தினசாமி, முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:கோதவாடியில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு, பண்ணைக்கோழி வளர்ப்பு, நாட்டுக்கோழிகள் அதிகளவில் வளர்க்கப்படுகிறது. அவைகளுக்கு நோய் ஏற்பட்டால், ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள வடசித்துார் அல்லது கிணத்துக்கடவு கால்நடை மருந்தகத்துக்கு செல்ல வேண்டும். சில நேரங்களில் நோயின் தாக்கம் அதிகரித்து, உயிரிழப்பும் ஏற்படுகிறது.இதை தடுக்கும் வகையில், கோதவாடியில் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிணத்துக்கடவு, வடசித்துார் கால்நடை மருந்தகங்களை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X